இந்தியாவின் பெருமையை சிதைக்க பா.ஜ.க முயற்சி : தேர்தல் அறிக்கையை கடுமையாக விமர்சித்த திமுக!!

Author: Udayachandran RadhaKrishnan
14 April 2024, 12:36 pm

இந்தியாவின் பெருமையை சிதைக்க பா.ஜ.க முயற்சி : தேர்தல் அறிக்கையை கடுமையாக விமர்சித்த திமுக!!

பா.ஜனதாவின் இந்த தேர்தல் அறிக்கையை எதிர்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. அந்த வகையில், தமிழகத்தில் ஆளும் தி.மு.க, பா.ஜனதாவின் தேர்தல் அறிக்கையை சாடியுள்ளது. இது தொடர்பாக தி.மு.க. செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ் இளங்கோவன் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

வேற்றுமையில் ஒற்றுமை என்ற இந்தியாவின் பெருமையை சிதைக்க பா.ஜனதா முயல்கிறது. பா.ஜனதாவை ஏற்காத மாநிலங்களில் கூட அதன் கொள்கையை திணிப்பதுதான் ஒரே நாடு ஒரே தேர்தல் முறை. வேற்றுமையில் ஒற்றுமை என்ற இந்தியாவின் பெருமையை சிதைக்க பா.ஜனதா முயல்கிறது.

ஓரிருவர் பா.ஜனதாவிற்கு ஆதரவாக இருந்தாலும் அதனை இந்த தேர்தல் அறிக்கை மாற்றிவிடும். தேர்தலில் அளிக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றாதவர்கள் பா.ஜ.க.வினர். தமிழ்நாட்டில் வாக்குகளை பெறுவதற்காக எதை வேண்டுமானாலும் கூறுவதுதான் பா.ஜனதாவின் கொள்கை” என்றார்.

  • Actor Vinayakan controversy போதையில் செய்த அடாவடி…என்னால சமாளிக்க முடியல…மன்னிப்பு கேட்ட விநாயகன்…!