சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க பாஜக முயற்சி : ஆருத்ரா விவகாரத்தை விசாரிக்கணும்.. திருமாவளவன் கருத்து!

Author: Udayachandran RadhaKrishnan
12 July 2024, 1:50 pm

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க பாஜக உள்ளிட்ட கட்சிகள் முயற்சி செய்து வருகிறது. ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் அரசியல் செயல் திட்டம் இருப்பதாக சந்தேகம் வருகிறது.

ஆம்ஸ்ட்ராங் கொலையில் ஆருத்ரா கோல்டு விவகாரமும் பேசப்படுகிறது. பின்னணியில் பாஜகவினர் உள்ளனர். ஆருத்ரா கோல்டு விவகாரத்தில் தொடர்புடையவர்கள் பாஜகவில் பொறுப்புகளில் உள்ளனர்.

பாஜக இதில் வலிந்து தலையிட்டு சிபிஐ விசாரணை கோருகிறது. இவையெல்லாம் புலனாய்வு விசாரணைக்கு உள்ளாக்கப்பட வேண்டியவை

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பிறகு விசிக தலைவர் திருமாவளவன் இவ்வாறு கூறினார்.

  • Ajith reunite Again With Adhik அஜித்துடன் மீண்டும் கூட்டணி… உருவாகும் மார்க் ஆண்டனி 2.. ஆதிக் முடிவு!!
  • Views: - 224

    0

    0