பிளாக்மெயில் செய்யும் சீனா? மோடி வாய் திறக்காதது குறித்து தேர்தலுக்கு பின் வெளியிடுவேன் : சு.சாமி ட்விஸ்ட்!

Author: Udayachandran RadhaKrishnan
17 May 2024, 2:58 pm

பிளாக்மெயில் செய்யும் சீனா? மோடி வாய் திறக்காதது குறித்து தேர்தலுக்கு பின் வெளியிடுவேன் : சு.சாமி ட்விஸ்ட்!

பா.ஜ.க. மூத்த தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான சுப்ரமணிய சாமி தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில், இந்திய பகுதிகளைத் தொடர்ந்து சீனா ஆக்கிரமிப்பு செய்து வருகிறது. சீன ஆக்கிரமிப்பை பிரதமர் மோடி தடுக்கவில்லை.

இந்திய பகுதிகளை ஆக்கிரமித்த சீனப்படைகளை ஏற்கனவே நாம் இரு முறை விரட்டியுள்ளோம். நம்மிடம் உள்ள ராணுவ வலிமையால் சீனா ஆக்கிரமித்த பகுதிகளை எளிதில் கைப்பற்றிவிடலாம்.

மேலும் படிக்க: திமுகவின் இலவச பேருந்து திட்டம் குறித்து பிரதமர் மோடி விமர்சனம்.. பதிலடி கொடுத்த அமைச்சர் பிடிஆர்!

ஆனால் பிரதமர் மோடி அதை செய்வதில்லை. காரணம் என்னவென்றால் பிரதமர் மோடியை சீனா பிளாக்மெயில் செய்து வருகிறது.

சீனா பிரதமர் மோடியை பிளாக்மெயில் செய்வதற்கான காரணத்தை தேர்தலுக்குப் பிறகு வெளிப்படுத்துவேன் என தெரிவித்துள்ளார். மோடி மீண்டும் பிரதமர் பதவிக்கு வரக்கூடாது என கடந்த மாதம் கருத்து தெரிவித்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!
  • Close menu