மகன் வந்து உணவு கொடுப்பான் என அவர் இறந்ததை கூட தெரியாமல் 3 நாட்களாக பசியால் தவித்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி தம்பதியின் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள நாகோல் நகரில் உள்ள ஜெய்ப்பூர் ஆந்திரா காலனியில் ரமணா (65), சாந்தகுமாரி (60) என்ற வயதான பார்வையற்ற வயதான மாற்றுதிறனாளி தம்பதியினர் தங்கள் இளைய மகனுடன் வசித்து வருகின்றனர்.
பார்வையற்ற தம்பதிக்கு இரண்டு மகன்கள் மூத்த மகன் பிரதீப் மனைவி குழந்தைகளுடன் வேறு இடத்தில் வசித்து வருகிறார்.
இளைய மகன் பிரமோத்திற்கு (30) திருமணம் ஆனாலும் சில காரணங்களால் அவரது மனைவி அவரை விட்டு சென்றுவிட்டார். இதனால் பெயிண்டர் வேலை செய்யும் பிரமோத் மதுவுக்கு அடிமையானலும் தனது பார்வையற்ற பெற்றோரை நல்லபடியாக கவனித்து கொண்டு வந்தார்.
இந்நிலையில் பிரமோத் கடந்த 3 நாட்களுக்கு முன்பு மது போதையில் வீட்டிற்கு வந்த பெற்றோருக்கு உணவு வழங்கி பின்னர் தூங்க சென்றுள்ளார்.
அதன் பிறகு எழுதிருக்கவில்லை தூக்கத்திலேயே பிரமோத் இறந்து விட்டார். இதனை அறியாத வீட்டில் இருந்த பார்வையற்ற பெற்றோரால் தங்கள் மகன் இறந்துவிட்டதை அடையாளம் காண முடியவில்லை.
எத்தனை முறை போனில் யாரும் அழைத்தாலும் பதில் சொல்லவில்லை. இதனால் பசியுடன் உணவு மற்றும் தண்ணீர் கேட்டு துடித்தனர். ஆனால் யாரும் பேசவில்லை முதுமையில் இருக்கும் பார்வையற்ற நிலையில் நிர்க்கதியாக இருந்தனர். குறைந்த பட்சம் அக்கம்பக்கத்தினர் கூட யாரும் வந்து பார்க்க வரவில்லை.
இதனால் ஒரு பக்கம் துர்நாற்றம், இன்னொரு பக்கம் பசியால் இருந்தனர். இந்நிலையில் இறந்து மூன்று நாட்கள் அனதால் , சடலம் அழுகிய நிலையில் வீடு முழுவதும் துர்நாற்றம் வீசியது. துர்நாற்றம் வீசியதால் அப்பகுதியினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து நாகோல் இன்ஸ்பெக்டர் சூர்யநாய்க், எஸ்.ஐ சிவநாகபிரசாத் ஆகியோர் அடங்கிய குழுவினர் சம்பவ இடத்துக்குச் சென்று பார்த்த போது ஒரு பக்கம் பசியால் துடிக்கும் வயதான மாற்றுதிறனாளி தம்பதி, மறுபுறம் தாங்க முடியாத துர்நாற்றம் என தவித்தவர்களை வீட்டின் வெளியே அழைத்து வந்தனர்.
பின்னர் வயதான தம்பதியினரை குளிப்பாட்டி உணவு வழங்கினர். பின்னர் அவர்களது இளைய மகன் பிரமோத் இறந்தது குறித்து பெற்றோரிடம் தெரிவித்தனர்.
பிரமோத்திற்கு வலிப்பு நோய் உள்ளதால் தூக்கத்தில் இருக்கும் போது வலிப்பு ஏற்பட்டு பிரமோத் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
பிரமோத்தின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனைக்கு பிறகே இறப்புக்கான காரணம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர். பின்னர் மற்றொரு மகன் பிரதீப்பை வரவழைத்த போலீசார் வயதான தம்பதியை அவரிடம் ஒப்படைத்தனர்.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.