அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட தடுப்பணை.. திமுக ஆட்சியில் நடக்கும் கேலிக்கூத்து : இபிஎஸ் குற்றச்சாட்டு!!
கடந்த 17ஆம் தேதி மறைந்த முன்னாள் மேயர் தா. மலரவன் வீட்டிற்கு இன்று வந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மலரவன் உருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளரிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, மறைந்த மலரவன், கோவை மேயராகவும், இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராகவும் பொறுப்பில் இருந்த காலத்தில், பல்வேறு கோவை நகரின் வளர்ச்சி திட்டங்களை செய்து கொடுத்தவர் என புகழாரம் சூட்டினார்.
கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் சிலந்தை ஆற்றில் தடுப்பணை கட்டி வருவதாகவும், இதனால் அமராவதி ஆற்றில் தண்ணீர் வரத்து குறைவதுடன், விவசாய தேவைக்கும், குடிநீர் தேவைக்கும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் என்றார்.
கர்நாடக அரசும் மேக தாதுவில் தடுப்பணை கட்டும் பணியை தொடங்கி இருப்பதாகவும், இதே போல் ஆந்திரா அரசு பாலாற்றில் தடுப்பணை கட்டும் முயற்சி மேற்கொண்டு வருவதாக கூறினார்.
அண்டை மாநிலங்கள், தமிழகத்திற்கு வரும் தண்ணீரை தடுப்பதில் குறியாக இருப்பதற்கு கண்டனம் தெரிவித்த எடப்பாடி பழனிச்சாமி, தமிழக அரசு உடனடியாக சட்டரீதியான நடவடிக்கைகளை எடுத்து தமிழகத்திற்கு வரவேண்டிய தண்ணீரை பெற்றுத் தர வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
தமிழகத்தில் முதல்வராக ஜெயலலிதா இருந்த காலகட்டத்தில், பல்வேறு தடுப்பணைகள் கட்டி தண்ணீரை சேமித்ததாக கூறிய எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக ஆட்சிக்காலத்தில் ஆறு தடுப்பணைகள் கட்ட திட்டம் தீட்டியதாகவும், அதில் ஒன்று கட்டப்பட்ட நிலையில், அடுத்து வந்த திமுக அரசு தடுப்பணை திட்டங்களை கிடப்பில் போட்டதாக குற்றம் சாட்டினார்.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஆயிரக்கணக்கான வாக்குகளை திமுக அரசு திட்டமிட்டு நீக்கி உள்ளதாக குற்றம் சாட்டிய எடப்பாடி பழனிச்சாமி, எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு கேலிக்கூத்தாக இருக்கிறது என்றார்.
மேலும் படிக்க: ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை.. இனி நினைச்சுகூட பாக்க முடியாது : விலை நிலவரம்!
தமிழக மற்றும் பாண்டிச்சேரியில் மொத்தம் 40 இடங்களில் அதிமுக மாபெரும் வெற்றி பெறும் என தெரிவித்தார்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.