நடிகர் விஜயகாந்த் மறைவு தொடர்பாக பாலிவுட் நடிகர் சோனு சூட் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில வருடங்களாகவே உடல்நலம் குன்றி வீட்டிலேயே முடங்கினார். நேற்று உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தேமுதிக தலைமை தெரிவித்தது. மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால் வெண்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு சிகிச்சை கொடுக்கப்படுவதாக தெரிவித்தது.
இதனிடையே, விஜயகாந்தின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும், 9 மணிக்கு மருத்துவ அறிக்கை வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மியாட் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- கேப்டன் விஜயகாந்த் அவர்கள் நுரையீரல் அழற்சி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வென்டிலேட்டர் ஆதரவுடன் சிகிச்சை பெற்றிருந்தார். மருத்துவ பணியாளர்களின் கடின முயற்சி இருந்தபோதிலும் அவர் இன்று காலை 28 டிசம்பர் 2023 காலமானார்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, ஆம்புலன்ஸ் மூலம் விஜயகாந்த்தின் உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்குகட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர். பிறகு, கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் எடுத்துச் செல்லப்பட்டது. சுமார் 3 மணிநேரம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, தேமுதிக அலுவலகம் கொண்டு செல்லப்பட்டது. அங்கு திரை பிரபலங்கள், தொண்டர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அதேவேளையில், சமூகவலைதளங்கள் மூலமாகவும் விஜயகாந்தின் மறைவுக்கு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், பாலிவுட் நடிகர் சோனு சூட் தனது X தளப்பக்கத்தில் போட்டுள்ள பதிவில், “கள்ளழகர் என்னுடைய முதல் படம். இது விஜயகாந்த் சார் எனக்கு கொடுத்த பரிசு. இந்த ஒரு படத்தில் தான் நான் அவருடன் நடித்தேன். அதன்பிறகு அவருடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. என் திரை பயணத்தையே அவருக்காக அர்ப்பணிக்கிறேன். உங்களை கண்டிப்பாக மிஸ் பண்ணுவோம் சார், என பதிவிட்டுள்ளார்.
மேலும், கள்ளழகர் பட சண்டை காட்சி குறித்த வீடியோவையும் அவர் பகிர்ந்து தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் சினிமாவில் உச்ச நடிகராக உள்ள நிலையில் அரசியலில் ஈடுபட்டு வருகிறார். 2026ல் நடக்கும் தேர்தலை மையமாக வைத்து…
வெற்றி இயக்குனர்… சமீப காலமாகவே கோலிவுட்டின் வெற்றி இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான “விடுதலை…
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆவரங்காடு பகுதியில் ஸ்ரீ அக்னி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பூச்சாற்றுதலுடன்…
கோவை தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்த அசாம் மாநிலத்திலத்தை சேர்ந்த வாய் பேச முடியாது 14 வயது சிறுமியை பாலியல் சீண்டல்…
எகிறும் எதிர்பார்ப்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி…
This website uses cookies.