முதல்வர் அலுவலகத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்: அல் கொய்தா காரணமா: பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு…!!

Author: Sudha
4 August 2024, 9:50 am

பீஹாரில் நிதீஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம்-பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. பாட்னாவில் அமைந்துள்ள முதல்வர் அலுவலகத்திற்கு அல்கொய்தா பெயரில் இ-மெயில் ஒன்று வந்தது. அதில் முதல்வர் அலுவலகத்தை வெடிகுண்டு வைத்து தகர்க்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

போலீசார், வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள், மோப்ப நாயுடன் வந்து சோதனை நடத்தினர்.சோதனையில் இ-மெயில் மிரட்டல், வெறும் புரளி என்று தெரியவந்தது.எனினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, முதல்வர் அலுவலகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பீஹார் முதல்வர் அலுவலகத்திற்கு அல் கொய்தா பெயரில், இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

முன்னதாக, பாட்னா விமான நிலையத்துக்கும் இதே போல வெடிகுண்டு மிரட்டல் வந்தது. மிரட்டல் விடுத்த நபரை பிடிக்க, போலீசார் தீவிர தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 272

    0

    0