4 மருத்துவமனைகளுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்.. அதிர்ச்சியில் தலைநகரம் : நிபுணர்கள் சோதனை!

Author: Udayachandran RadhaKrishnan
14 May 2024, 1:17 pm

4 மருத்துவமனைகளுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்.. அதிர்ச்சியில் தலைநகரம் : நிபுணர்கள் சோதனை!

4 மருத்துவமனைகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

கடந்த மே 1ம் தேதி டெல்லியில் உள்ள 150க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தன. பின்னர் அது புரளி என கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில், டெல்லியில் உள்ள தீப் சந்த் மருத்துவமனை, ஜிடிபி மருத்துவமனை, தாதா தேவ் மருத்துவமனை, ஹெட்கேவார் மருத்துவமனை ஆகிய 4 மருத்துவமனைகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து விசாரணை நடத்தி வரும் போலீசார், சம்பவ இடத்தில் வெடிகுண்டு நிபுணர்களை வரவழைத்து ஆய்வு செய்தனர்.

மேலும் படிக்க: தயாநிதி மாறன் தொடர்ந்த வழக்கு. ஆஜரான இபிஎஸ் : நீதிமன்றம் போட்ட உத்தரவு!

டெல்லி போலீசார் விசாரணையைத் துவங்கி உள்ளனர். நான்கு மருத்துவமனைகளுக்கு போலீஸ் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன. மிரட்டல் விடுத்த நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

  • உன்னை நீயே நம்பு போதும்.. தெறிக்கும் வரிகளில் வெளியான Vidaamuyarchi Second single!