கேரளாவில் நாளை மறுநாள் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வயல்வெளி ஒன்றில் சக்திவாய்ந்த குண்டுகள் கண்டெடுக்கப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் உள்ள 20 தொகுதிகளுக்கும் நாளை மறுநாள் நடக்கும் 2வது கட்ட நாடாளுமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதையொட்டி, இன்று மாலையுடன் பிரச்சாரம் நிறைவடைகிறது.
இந்த நிலையில், கண்ணூரில் உள்ள மட்டன்னூரில் இருக்கும் ஒரு வயல்வெளியில் 9 இரும்பு வெடிகுண்டுகள் கிடப்பதாக பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் உடனடியாக வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிததனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், 9 இரும்பு குண்டுகளையும் கைப்பற்றினர்.
மேலும் படிக்க: பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? Ilayaraja தரப்புக்கு High Court கேள்வி!
அதிபயங்கர விளைவை ஏற்படுத்தும் 9 குண்டுகளையும் உடனடியாக செயலிழக்கச் செய்தனர். இதைத் தொடர்ந்து, அந்தப் பகுதியில் சோதனையையும் நடத்தினர். மேலும், இது தொடர்பாக போலீசார் வழக்கப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கேரளாவில் நாடாளுமன்ற தேர்தல் இன்னும் 2 நாட்களில் நடைபெற உள்ள நிலையில், சக்திவாய்ந்த கண்டுகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேஜிஎஃப் கதாநாயகி யாஷ் நடித்த “கேஜிஎஃப்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகமானவர் ஸ்ரீநிதி ஷெட்டி. இவர் தனது முதல் திரைப்படத்திலேயே…
கனவுக்கன்னி தற்கால இளைஞர்களின் கனவுக்கன்னிகளில் ஒருவராக வலம் வருபவர் மாளவிகா மோகனன். இவர் மலையாளத்தில் மிக பிரபலமான நடிகையாக வலம்…
தமிழ் திரைப்பிரபலங்களின் திடீர் மறைவு திரையுலகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. அந்த வகையில் பிரபல திரைப்பட இயக்குநர் திடீரென மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.…
தமிழக வெற்றி கழகம் கட்சியின் பூத் கமிட்டி முகவர்கள் கூட்டம் இன்று மாலை கோவை சக்தி சாலை குரும்பபாளையம் பகுதியில்…
விஜய்யின் ரோட் ஷோ தவெக தலைவர் விஜய் இன்று கோவையில் நடைபெறும் தனது கட்சியின் பூத் கமிட்டி மாநாட்டில் பங்கேற்கிறார்.…
This website uses cookies.