கர்நாடகாவில் மீண்டும் குண்டு வெடிக்கும்.. முதலமைச்சர், உள்துறை அமைச்சருக்கு மின்னஞ்சலில் மிரட்டல் : பரபரப்பில் போலீஸ்!
Author: Udayachandran RadhaKrishnan5 March 2024, 2:41 pm
கர்நாடகாவில் மீண்டும் குண்டு வெடிக்கும்.. முதலமைச்சர், உள்துறை அமைச்சருக்கு மின்னஞ்சலில் மிரட்டல் : பரபரப்பில் போலீஸ்!
பெங்களூருவில் ராமேஸ்வரம் கஃபேவில் மர்மபொருள் வெடித்து விபத்தானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது,. அதை விட இது வெடிகுண்டு விபத்துதான் என முதலமைச்சர் சித்தராமையா கூறியது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் அவர் இது குறித்து விசாரணையில் போலீசார் இறங்கியுள்ளனர், இதை அரசியலாக பார்க்க வேண்டாம் என கேட்டுக் கொண்டார் . இந்த நிலையில் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியது, ஓட்டலுக்கு வந்த மர்மநபர் ஒருவர் வைத்து சென்ற பையில் வெடிகுண்டு வெடித்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தநிலையில் கர்நாடகாவில் பேருந்துகள், வழிபாட்டு தலங்களில் குண்டு வெடிக்கும் என மின்னஞ்சலில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடக முதல்வர், உள்துறை அமைச்சர், காவல்துறை தலைவருக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அண்மையில் பெங்களூரு உணவகத்தில் மர்மப் பொருள் வெடித்த நிலையில் மீண்டும் மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறது.