அரசு மருத்துவமனைகளில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி இலவசமில்லை: பொது சுகாதாரத்துறை அறிவிப்பு..!!

Author: Rajesh
18 May 2022, 9:16 am

சென்னை: தமிழகத்தில் 18 முதல் 59 வயது உள்ளவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்படாது என பொது சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

பொது சுகாதாரத் துறை இயக்குனர் செல்வவிநாயகம் அனைத்து மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை, மத்திய அரசு வழிகாட்டுதல்படி, 2021 ஜனவரி 16 முதல் கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் தமிழகத்தில் போடப்படுகின்றன.

அதன் தொடர்ச்சியாக, ‘கோர்பிவேக்ஸ் மற்றும் ஸ்புட்னிக் – வி’ தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்தன. தற்போது ‘கோவோவேக்ஸ்’ தடுப்பு மருந்த தேசிய கொரோனா தடுப்பூசி திட்டத்தில் இணைக்கப்பட்டு உள்ளது.

அதன்படி, 12 முதல் 17 வயது உடையவர்கள், தனியார் மருத்துவமனைகளில் ‘கோவோவேக்ஸ்’ தடுப்பூசி எடுத்துக் கொள்ளலாம். அதேபோன்று, 12 முதல் 17 வயது உடையவர்கள் முதல் மற்றும் இரண்டாம் தவணையாக ‘கோர்பிவேக்ஸ்’ தடுப்பூசியை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் செலுத்திக் கொள்ளலாம். மேலும், 15 முதல் 17 வயது உடையவர்கள், கோவாக்சின் தடுப்பூசியை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் போட்டுக் கொள்ளலாம்.

முதல் மற்றும் இரண்டாம் தவணையாக கோவாக்சின் அல்லது கோவிஷீல்டு தடுப்பூசிகள் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு போடலாம். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கான பூஸ்டர் டோஸ் தடுப்பூசியாக போட்டு கொள்ளலாம். ‘ஸ்புட்னிக் – வி’ தடுப்பூசியை, 18 வயதுக்கு மேற்பட்டோர் தனியார் மருத்துவமனைகளில் போட்டு கொள்ளலாம்.

18 – 59 வயதுக்கு உட்பட்டோருக்கான பூஸ்டர் டோஸ் தடுப்பூசி, அரசு மருத்துவமனைகளில் இலவசமாக வழங்கப்படாது. அதேநேரம், தனியார் மருத்துவமனைகளில் போட்டு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

  • Vimal shares Kalavani movie experienceநடிகர் விமல் ஓவியாக்கு அண்ணனா…என்னங்க சொல்றீங்க ..பலருக்கு தெரியாத உண்மை தகவல்..!
  • Views: - 953

    0

    0