பிச்சைக்காரரிடம் கடன் வாங்கிய தொழிலதிபர்.. கடைசியில் காத்திருந்த டுவிஸ்ட்!

Author: Udayachandran RadhaKrishnan
4 November 2024, 7:53 pm

தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தில் போனக்கல் பகுதியில் அசோக் என்பவர் சாய்பாபு கோயில் முன்பு தனது மனைவியுடன் பிச்சை எடுத்து வருகிறார்.

பல ஆண்டுகளாக பிச்சை எடுத்து வரும் அவர் தனது மகள் படிப்பிற்காக சிறுக சிறுக சேர்த்து வைத்திருந்தார். இந்நிலையில் ஓட்டல் அதிபர் நரசிம்மராவ் என்பரின் ஓட்டலுக்கு சாப்பிட செல்லும் போது பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கத்தில் நரசிம்மராவ் உன்னிடம் பணம் இருந்தால் தன்னிடம் கொடுத்தால் அதிக வட்டி தருவதாக கூறி உள்ளார்.

இதனால் அசோக் வட்டிக்கு ஆசை பட்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சேமித்து வைத்திருந்த ₹ 50,000 கடனாக வாங்கினார். இதற்கான வட்டியை சில மாதம் கொடுத்த நரசிம்மராவ் அதன்பிறகு வட்டி கட்டவில்லை. பணம் கட்டால் நரசிம்மராவ் கடனைத் திருப்பித் தர மறுத்துவிட்டார்.

இந்நிலையில் நரசிம்மராவ் பல இடங்களில் கடன் வாங்கியதால் ₹ 1.95 கோடி கடன் ஏற்பட்ட நிலையில் பிச்சைக்காரர் அசோக்குடன் சேர்த்து 69 பேருக்கு வழக்கறிஞர் மூலம் பணத்தை திருப்பி தர முடியாது என்னிடம் எதுவும் இல்லை என ஐபி நோட்டீஸ் அனுப்பினார்.

இதற்காக கம்மம் சிவில் நீதிமன்றத்தில் திவால் மனு வழக்கு தாக்கல் செய்தார். அதில் ₹ 1 கோடியே 95 லட்சம் கடன் வாங்கிய நிலையில் அதனை கட்டும் நிலையில் இல்லை என 69 பேருக்கு ஐபி நோட்டீஸ் கொடுத்துள்ளார். நோட்டீஸ் பெற்றவர்களில் பிச்சைக்காரன் அசோக் பலரும் கண்ணீருடன் உள்ளனர்.

வியாபாரி நரசிம்மராவ்வை நம்பி பல வருடங்களாக சேமித்து வைத்திருந்த பணத்தை வழங்கினால் இப்படி ஏமாற்றி விட்டதாக பிச்சைக்காரர் அசோக் கூறி உள்ளார்.

அசோக், தன் மகள் படிக்க சேமித்த பணத்தை பெற்று தர வேண்டும் என கூறும் நிலையில் நரசிம்மராவ் பிச்சைக்காரை கூட விட்டு வைக்காமல் கடன் பெற்று ஏமாற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 161

    0

    0