எமனாக மாறிய நீச்சல் குளம்: பயிற்சியாளரின் அஜாக்கிரதையால் பலியான சிறுவன்: சென்னையில் பரபரப்பு…!!
Author: Sudha5 August 2024, 10:37 am
சென்னை புழல் அருகே உள்ள விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த ரத்தினகுமார் மற்றும் ராணி தம்பதியரின் மகன் கீர்த்தி சபரீஸ்கர். 10 வயதான இந்த சிறுவன் ஒரு சிறப்பு குழந்தை என சொல்லப்படுகிறது.
இந்த சிறுவன் குளத்தூரில் உள்ள “BLUESEAL” நீச்சல் பயிற்சி மையத்தில் நீச்சல் பயிற்சி பெற்று வந்துள்ளார்.வழக்கம்போல நீச்சல் பயிற்சிக்கு சென்ற சிறுவன் நீரில் மூழ்கி பலியாகியுள்ளார்.
சிறுவன் உயிரிழந்ததை அடுத்து பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.புகாரின் பேரில் “BLUESEAL” நீச்சல் குளத்தின் உரிமையாளர் காட்வின் மற்றும் பயிற்சியாளர் அபிலாஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
பலியான சிறுவனின் உடல் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
முறையான பயிற்சி அளிக்காமல் பயிற்சியாளர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததால் சிறுவன் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.