சென்னை : கட்டிட வேலை நடந்த போது இரும்பு திருடியதாக 23 வயது இளைஞர் அடித்தே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சைதாப்பேட்டை, தாடண்டர் நகர் மைதானம் அருகே புதிதாக கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. அங்கு வட மாநில தொழிலாளர்கள் பலர் தங்கி வேலை செய்து வருகின்றனர்.
கட்டிடம் கட்டதேவையான இரும்பு கட்டுமான பொருட்களும் அங்கே அடுக்கிவைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை 3 பேர் கொண்ட கும்பல் இருசக்கர வாகனத்தில் கட்டிட பகுதிக்கு சென்று அங்கிருந்த இரும்பு பலகையை திருடிக்கொண்டு, இருசக்கர வாகனத்தில் தப்பிச் செல்ல முயன்றது.
இதை அங்கு தங்கியிருந்த தொழிலாளி ஒருவர் பார்த்து கூச்சலிட்டார். இதையடுத்து அங்கு தங்கிஇருந்த தொழிலாளர்கள், பொறியாளர்கள் ஒன்றிணைந்து கொள்ளையர்களை விரட்டினர். அப்போது, இருசக்கர வாகனத்தின் நடுவே அமர்ந்திருந்தவர் தப்பினார்.
வாகனத்தை ஓட்டியவர், பின்னால் அமர்ந்து திருடப்பட்ட இரும்புபலகையை பிடித்துக் கொண்டிருந்தவர் என இருவர் தொழிலாளர்களிடம் சிக்கிக் கொண்டனர்.
இதையடுத்து, பிடிபட்ட திருடர்கள் இருவரையும் கட்டி வைத்து இரும்புகம்பி மற்றும் கட்டையால் தாக்கியுள்ளனர். இதில், இருவரும் மயங்கி விழுந்துள்ளனர்.
இதையடுத்து தொழிலாளர்கள் அங்கிருந்து சென்றனர். இதற்கிடையில், இருசக்கர வாகனத்திலிருந்து தப்பியவர் நடந்த சம்பவம் குறித்து பிடிபட்டவர்களின் உறவினர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார்.
அவர்கள் சைதாப்பேட்டை போலீஸாருக்கு தெரிவித்தனர். இதையடுத்து சைதாப்பேட்டை போலீஸார் சம்பவ இடம் விரைந்து பலத்த காயங்களுடன் மயங்கிய நிலையில் இருந்த இருவரையும் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீஸாரின் விசாரணையில், இரும்பு திருடச் சென்றது சைதாப்பேட்டை வெங்கடாபுரத்தைச் சேர்ந்த சாகின்ஷா காதர் (வயது 23), அவரது நண்பர்கள் அதே பகுதியைச் சேர்ந்த ஹேமநாதன் (வயது 20) மற்றும் 16 வயது சிறுவன் என்பது தெரிய வந்தது.
இதில், நடுவில் அமர்ந்த ஹேமநாதன் தப்பி ஓடிய நிலையில் இருசக்கரவாகனத்தை ஓட்டிய 16 வயது சிறுவன், திருடப்பட்ட இரும்புபலகையை பின்னாலிருந்து பிடித்திருந்த சாகின்ஷா காதர் இருவரும் பிடிபட்டு தாக்குதலுக்கு ஆளாகினர் என்பது தெரியவந்தது.
இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட சாகின்ஷா காதர் உயிரிழந்தார். 16 வயது சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த கொலை தொடர்பாக கட்டிட பொறியாளர்களான உமா மகேஷ்வரன் (வயது 33), ஜெயராம் (வயது 30), நம்பிராஜ் (வயது 29), பாலசுப்பிரமணியன் (வயது 29), சக்திவேல் (வயது 29), மனோஜ் (வயது 21), அஜித் (வயது 27), தொழிலாளி சிவபிரகாசம் (வயது 22) ஆகிய 8 பேரை கைது செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நடிகர் விஜய் சினிமாவில் உச்ச நடிகராக உள்ள நிலையில் அரசியலில் ஈடுபட்டு வருகிறார். 2026ல் நடக்கும் தேர்தலை மையமாக வைத்து…
வெற்றி இயக்குனர்… சமீப காலமாகவே கோலிவுட்டின் வெற்றி இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான “விடுதலை…
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆவரங்காடு பகுதியில் ஸ்ரீ அக்னி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பூச்சாற்றுதலுடன்…
கோவை தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்த அசாம் மாநிலத்திலத்தை சேர்ந்த வாய் பேச முடியாது 14 வயது சிறுமியை பாலியல் சீண்டல்…
எகிறும் எதிர்பார்ப்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி…
This website uses cookies.