பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளில் ஒருவரான திருவேங்கடம் மாதவரத்தில் போலீஸ் என்கவுண்டரில் கொல்லப்பட்டார்.
கைது செய்யப்பட்ட 11 சந்தேக நபர்களையும் 5 நாட்களாக போலீஸ் காவலில் வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
காலை 7 மணிக்கு திருவேங்கடம் மாதவரம் அருகே உள்ள ஒரு இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, எஸ் ஐ ஒருவரைத் தாக்கி தப்பிக்க முயன்று உள்ளார்.இதனால் ஒரு போலீஸ் குழு அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது.
இதில் பலத்த காயம் அடைந்த அவர் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு டாக்டர்கள் பரிசோதித்து இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
கடந்த 2015-ம் ஆண்டு பெரியபாளையம் அருகே தாமரைப்பாக்கம் கூட் சாலையில் பகுஜன் சமாஜ் கட்சியின் திருவள்ளூர் மாவட்டத் தலைவர் தென்னரசு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளிகளில் திருவேங்கடமும் ஒருவர்.
என்கவுண்டர் நடந்த இடத்தில் சென்னை மாநகர சட்டம் ஒழுங்கு கூடுதல் காவல் ஆணையர் (வடக்கு) நரேந்திரன் நாயர் விசாரணை நடத்தி வருகிறார்.
சந்தோஷத்தில் பிரதீப் ரங்கநாதன் இயக்குனரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் பிரபல பாலிவுட் நடிகர் ஆமிர் கானுடனா சந்திப்பு குறித்து தன்னுடைய…
அஜித்தின் விடாமுயற்சி படம் சமீபத்தில் திரைக்கு வந்து கலவையான விமர்சனங்கள் பெற்று வருகிறது. ஆனால் இதையெல்லாம் தூக்கி சாப்பிடும் அளவுக்கு…
முதல் முறையாக, ஜெயலலிதா உடன் நடிக்க இருந்த படம் குறித்து பேசுவதற்காக வேதா இல்லத்திற்கு வந்ததாக ரஜினிகாந்த் கூறியுள்ளார். சென்னை:…
ஓ மை கடவுளே படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்துவின் அடுத்த படம்தான் DRAGON. பிரதீப் ரங்நாதன் நடிக்க, ஏஜிஎஸ் நிறுவனம்…
கரூர் அருகே 10ம் வகுப்பு மாணவியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த 12ம் வகுப்பு மாணவர் பிடிபட்ட நிலையில், மேலும்…
தமிழக மக்களுக்கு இதுமாதிரியான துரோகங்களை செய்துவிட்டு மும்மொழிக் கொள்கை பற்றி முதல்வர் பேசுவதாக பொ.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். கோயம்புத்தூர்: கோவை மாவட்டம்,…
This website uses cookies.