பொய் மூட்டை… CM ஸ்டாலினுக்கு நோபல் பரிசே வழங்கலாம் : மிரட்டலுக்கெல்லாம் அஞ்சமாட்டோம்.. இபிஎஸ் அதிரடி பேச்சு!!
சோளிங்கர் அடுத்த பாண்டியநல்லூரில் அரக்கோணம் அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.எல்.விஜயனை ஆதரித்து கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரித்தார்.
பின்னர் பிரச்சாரத்தில் அவர் பேசியதாவது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தோல்வி பயத்தில் உள்ளனர். நான் பேசுவதில் எது பொய் என்று கூறினால் பதில் சொல்லத் தயார்.
விமர்சனத்துக்கு அ.தி.மு.க. தொண்டன்கூட பயப்பட மாட்டான். மக்களை ஏமாற்றி தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. வாரிசு அரசியலுக்கு இந்த தேர்தலில் மக்கள் முற்றுப்புள்ளி வைப்பார்கள்.
தேர்தல் வாக்குறுதிகளை தி.மு.க. நிறைவேற்றவில்லை. உருட்டல், மிரட்டலுக்கு எல்லாம் அ.தி.மு.க. அஞ்சாது. அ.தி.மு.க.வினர் மீது பொய் வழக்குகள் போடுவது வாடிக்கையாகிவிட்டது.
எங்கள் ஆட்சியின்போது தி.மு.க. மீது வழக்கு போடவில்லை; மக்கள் பணியாற்றினோம். தி.மு.க. அரசு எந்த திட்டங்களையும் கொண்டு வரவில்லை. திட்டங்களை கொண்டு வந்தால்தானே நாங்கள் குறை கூற முடியும். விலைவாசி விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது.
மூன்று ஆண்டு கால ஆட்சியில் மக்களுக்கு செய்தது என்ன?. 3 லட்சம் கோடி ரூபாய் கடன் மட்டுமே அரசு வாங்கியுள்ளது. விஞ்ஞான ரீதியான யோசனைகளை பயன்படுத்தி விதவிதமான வாக்குறுதிகளை அளித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களை ஏமாற்றியுள்ளார். கிடைக்கும் நேரத்தில் மக்கள் பணியாற்றுங்கள்.
இந்தியாவிலேயே மக்களை சந்திக்காத ஒரே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான்; பொய் பேசுவதற்கு மு.க.ஸ்டாலினுக்கு நோபல் பரிசே வழங்கலாம். நாங்களா ஆளுங்கட்சியாக இருக்குறோம்? எதிர்க்கட்சியாக இருக்கும் எங்களால் எப்படி பிரதமர் மோடியை எதிர்க்க முடியும்? என அவர் கூறினார்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.