பேருந்தில் டூயட் பாட்டுகளை போட்டு இளம்பெண்ணை காதலில் விழ வைத்த ஓட்டுநர் : உல்லாச வாழ்க்கையால் நடந்த விபரீதம்!!

Author: Udayachandran RadhaKrishnan
11 December 2022, 6:54 pm

தஞ்சாவூர் மாவட்டம் மேலஉளூர் பகுதியைச் சேர்ந்தவர் அகல்யா,(26) கல்லுாரி முடித்து விட்டு, அரசு தேர்விற்காக தஞ்சாவூரில் உள்ள மாவட்ட மைய நுாலகத்தில் படிப்பதற்காக தினமும், மேல உளூரில் இருந்து தஞ்சாவூருக்கு தனியார் பஸ்சில் வந்து சென்றுள்ளார்.

கடந்த 6ம் தேதி முதல் அகல்யாவை காணவில்லை என்பதால், அவரது பெற்றோர், உறவினர்கள் பல இடங்களில் தேடினர். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை வடசேரி பாசன வாய்க்காலில் இளம்பெண் உடல் கிடப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில், போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

விசாரணையில் காணாமல் போன அகல்யா என்பது தெரியவந்தது. உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணையை நடத்தினர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேலும் அகல்யாவின் செல்போன் எண்ணை வைத்து, அவருக்கு வந்த அழைப்புகளைச் போலீசார் தீவிரமாக விசாரணை செய்தனர். இதில் தஞ்சாவூர் ஞானம் நகரை சேர்ந்த நாகராஜ் (வயது 25) என்பவர் கடைசியாகத் தொடர்பு கொண்டது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் நாகராஜைப் பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் நாகராஜ் தஞ்சாவூர் – பட்டுக்கோட்டை வழித்தடத்தில் இயங்க கூடிய தனியார் பஸ்சில் டிரைவராக வேலை பார்த்து வந்தது தெரிய வந்துள்ளது.
அப்போது மேலஉளூரில் இருந்து தினமும் தஞ்சாவூருக்கு வரும் அகல்யாவுடன் கடந்த மூன்று மாதங்களாகப் பஸ் டிரைவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. பஸ்சில் அகல்யா வரும் போதெல்லாம் காதல் பாட்டு போட்டு அசத்துவராம்.
நாளைடைவில் இவர்களது காதல் மலர்ந்தது. மேலும் இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அடிக்கடி இருவரும் அடிக்கடி வெளியில் சுற்றி வந்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.

அப்போது நாகராஜ் திருமணமானவர் என அகல்யாவிற்கு தெரிய வந்ததுள்ளது. இருப்பினும், தன்னையும் திருமணம் செய்துகொள்ளக் கூறி அகல்யா வற்புறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில்,திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடந்த 6ம் தேதி அகல்யாவை காரில் நாகராஜ், அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. பின்னால் ஏற்படும் விபரீத்தை புரிந்து கொள்ள முடியாத சூழ்நிலையில் திருமணம் கனவு உலகத்தில் இருந்த அகல்யா பஸ் டிரைவரிடம் சென்றதாக கூறப்படுகிறது.

அப்போது புதுக்கோட்டை சாலை பகுதியில் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து, துப்பட்டாவால் அகல்யாவின் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார் நாகராஜ் .

பின்னர் காரில் அவரது உடலை வைத்துக்கொண்டு அன்றிரவு வடச்சேரி வாய்காலில் வீசி வந்து விட்டார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 632

    0

    0