செந்தில் பாலாஜிக்காக காத்திருக்கும் அமைச்சரவை மாற்றம்.. வெளியாகும் முக்கிய அறிவிப்பு!
Author: Udayachandran RadhaKrishnan26 September 2024, 12:04 pm
செந்தில் பாலாஜி 471 நாட்களுக்கு பிறகு சிறையில் இருந்து வெளியே வருகறிர். அவரின் வருகைக்காக திமுகவினர், ஆதரவாளர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் செந்தில் பாலாஜி வழங்கப்பட்டுள்ள நிபந்தனைகள் குறித்து,
வழக்கறிஞர் இளங்கோ கூறுகையில், 15 மாதங்களுக்கு மேலாக வெறும் விசாரணை குற்றவாளியாக இருப்பதால் ஜாமின் வழங்கப்பட்டது. அடிப்படை உரிமைகளை கருத்தில் கொண்டு செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கி உள்ளது.
செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராக எந்த கட்டுப்பாடும் தடையும் உச்சநீதிமன்றம் விதிக்கவில்லை என்று கூறினார். சுப்ரீம் கோர்ட் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனையுடன் ஜாமின் வழங்கி உள்ளது.
வெளிநாடுகளுக்கு செல்லக்கூடாது. அவர் தனது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும். விசாரணைக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் சாட்சிகளை கலைக்கக்கூடாது. வாரந்தோறும் திங்கள், வெள்ளிக்கிழமைகளில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் கையெழுத்திட வேண்டும்.
ரூ.25 லட்சம் பிணைத்தொகை செலுத்தி செந்தில் பாலாஜி ஜாமின் பெற்றுக்கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. செந்தில் பாலாஜி இன்று மாலை சிறையில் இருந்து வெளியே வர வாய்ப்பு உள்ளது.
இதனிடையே, அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கில் நீதிமன்றம் வழங்கிய கட்டுப்பாடுகள் போன்று, செந்தில் பாலாஜிக்கு கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்கப்படவில்லை என்பதால், அவர் மீண்டும் அமைச்சராவார் என்று கூறப்படுகிறது.
அமைச்சரவை மாற்றம், உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி என்று பரபரத்துக்கொண்டிருக்கும் வேளையில், அமைச்சரவையில் செந்தில் பாலாஜி மீண்டும் இடம் பிடிப்பார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.