சிஏஜி அறிக்கையே வேற… ஊழல் இல்லாத ஆட்சியை பிரதமர் மோடி நடத்துகிறார் : ஆளுநர் தமிழிசை கருத்து!!

Author: Udayachandran RadhaKrishnan
24 September 2023, 6:44 pm

சிஏஜி அறிக்கையே வேற… ஊழல் இல்லாத ஆட்சியை பிரதமர் மோடி நடத்துகிறார் : ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் கருத்து!!

சி.ஏ.ஜி. அறிக்கை குறித்து உரிய பதில் அளிக்கப்படும் என்று புதுச்சேரி துணை நிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-
“திட்டங்கள் தாமதமாகும் போது அல்லது மாற்றங்கள் செய்யப்படும் போது அதற்கான செலவுகள் அதிகரிக்கும். அதைத் தான் சி.ஏ.ஜி. அறிக்கை குறிப்பிடுகிறது.

இது குறித்து உரிய பதில் அளிக்கப்படும். பிரதமர் மோடி ஊழல் இல்லாத ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார் என்பது உலகத்திற்கே தெரியும்.

மகளிர் இடஒதுக்கீடு நிச்சயமாக செயல்பாட்டுக்கு வரும். ஆனால் எதிர்கட்சியினர் வராது என்று சொல்கிறார்கள். அவர்களின் எதிர்மறை எண்ணத்தை இது காட்டுகிறது.

இத்தனை காலமாக மகளிர் இடஒதுக்கீடு வருமா, வராதா என்ற நிலை இருந்து வந்தது. ஆனால் தற்போது அதற்கான ஒரு கால வரையறை நமக்கு தெரியவந்திருக்கிறது.” இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

  • Mohanlal Appreciates Lubber Pandhu Team லப்பர் பந்து வேற லெவல் படம்.. திறமையா எடுத்திருக்காங்க : உச்ச நடிகர் பாராட்டு!
  • Views: - 296

    0

    0