கேரவனில் கேமரா.. நடிகை ராதிகா தப்பு செஞ்சதுனால பயம் : பரபரப்பை கிளப்பிய ராஜேஸ்வரி பிரியா..!!!
Author: Udayachandran RadhaKrishnan1 September 2024, 6:14 pm
பிரபல நடிகை ராதிகா, கேரள திரையுலகில் பல வருடங்களாகவே நடந்து வரும் ஒரு முக்கியமான விஷயத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.
கேரள செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், “கேரளாவில் படப்பிடிப்பின் போது வழங்கப்பட்டு உள்ள கேரவனில் ரகசியமாக கேமராக்களை பொருத்தி நடிகைகள் ஆடைகளின்றி காட்சி அளிக்கும் வீடியோக்களை பதிவு செய்கின்றனர்.
பிறகு அந்த வீடியோக்களை அங்கே ஷூட்டிங்கில் படப்பிடிப்பில் இருக்கும் நடிகர்கள் ஒன்றாக உட்கார்ந்து தங்களது செல்போனில் பார்த்து ரசித்துள்ளனர்.. இதுபோன்ற சம்பவங்களை பலமுறை நானே நேரில் பார்த்துள்ளேன். அதனால் தான் பயந்து போய் ஓட்டலில் ரூம் எடுத்து, அங்கே சென்று நான் உடை மாற்றிக் கொண்டு ஷூட்டிங்கிற்கு வருவேன்.
நானே பலமுறை எனக்கு தெரிந்த நடிகைகளிடம் கேரவன் உள்ளே போய்வரும் போது கவனமாக போகுமாறு கூறி இருக்கிறேன். நிறைய நடிகைகளின் அறைக்கதவுகளை பலர் தட்டுவதை பார்த்து இருக்கிறேன். பல பெண்கள் இதுபோன்ற தொந்தரவுகளை தாங்காமல் என்னுடைய அறைக்கு வந்து உதவி செய்யுமாறு கேட்ட தருணங்களும் உண்டு” என்றெல்லாம் பல்வேறு விஷயங்களை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அனைத்து மக்கள் அரசியல் கட்சியின் நிறுவனத் தலைவர் ராஜேஸ்வரிபிரியா காட்டமாக கேள்வி எழுப்பியிருக்கிறார். அத்துடன் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “தைரியமான பெண்ணாக தன்னை அடையாளப்படுத்தி கொள்ளும் நடிகை ராதிகா அவர்கள் மலையாள சினிமா நடிக்கும்போது, நடிகைகள் உடை மாற்றுவதனை காரவனில் ரகசிய கேமரா பொருத்தி ஆண்கள் சிலர் பார்த்து சிர்த்ததனை பார்த்தேன் என்றும் பிறகு தான் காரவனில் உடை மாற்றாமல் அறைக்கு சென்று மாற்றியதாக கூறுவது அதிர்ச்சியாக உள்ளது.
பிற நடிகைகளுக்கும் தகவலை தெரிவித்தேன் என்று சொல்லும் ராதிகா அவர்கள் ஏன் காவல்துறையிடம் புகார் அளிக்கவில்லை? ஏன் பத்திரிகையாளர்களை சந்தித்து இப்படிபட்ட மோசமான செயலை வெளியில் கொண்டுவரவில்லை? என்ற பல வினாக்கள் எழுகின்றன.
இப்படிதான் நடந்தேறி இருக்கிறது சினிமா துறையில் பெண்களுக்கு எதிரான பல்வேறு குற்றங்கள். குற்றத்தை தட்டி கேட்காமல் இருப்பது கூட ஒரு வகை குற்றம்தான். வாய்ப்பு வராதோ என்ற பயம் பெண்களை மௌனமாக இருக்க வைத்திருப்பது மிகவும் வருத்தத்திற்குறிய செயலாகும்.
பெண்களின் இந்த மவுனமே ஒட்டு மொத்த குற்றங்களுக்கும் முடிவு கட்ட முடியாத நிலையில் இருக்க வைக்கிறது.வெளியில் வந்து தைரியமாக புகார் கொடுங்கள் அதன் மூலமாகதான் நமது அடுத்த தலைமுறை பெண்களுக்கு இதுபோன்று நடக்காமல் தடுக்க முடியும். பொறுத்தது போதும்!!” என்று தெரிவித்திருக்கிறார் ராஜேஸ்வரி பிரியா