தில்லு முல்லு கட்சி என்பதை திமுக நிரூபித்துள்ளது.. பணம் கொடுக்காமல் தேர்தலை சந்திக்க முடியுமா? பிரேமலதா விஜயகாந்த் சவால்!!
Author: Udayachandran RadhaKrishnan15 September 2022, 5:06 pm
எண்ணியிலடங்காத பொய்யான வாக்குறுதிகளை அளித்து தில்லு முல்லு கட்சி என்பதை திமுக நிருபித்துள்ளதாக பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் தேமுதிக சார்பில் முப்பெரும் விழா தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நடைபெற்று நலத்திட்டங்களை வழங்கினார்.
அதனை தொடர்ந்து முப்பெரும் விழா மேடையில் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தன்னுடைய வாழ்க்கையை சிஸ்டமேட்டிக்காக கொண்டு மக்களுக்காக தன் வாழ்க்கையை அர்பணித்தவர் தான் விஜயகாந்த்.
ஆட்சிக்கு தேமுதிக வரவில்லை என்றாலும் ஆட்சியில் இருப்பவர்கள் கோடி கோடியாக கொள்ளை அடிப்பவர்கள் தான் உள்ளதாகவும், ஒரு பக்கம் மின் வெட்டு பிரச்சனை ஒரு பக்கம் மின் கட்டணம் உயர்வு தமிழகத்தில் நிலவுவதாகவும் அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் மின்வெட்டு ஏற்பட்டதால் உடனே பொறியாளரை பணியிடை நீக்கம் செய்கிறார்கள்.
ஆனால் தமிழகத்தில் மின் வெட்டால் மக்கள் பாதிப்புள்ளாகியுள்ளதாக கூறினார். அதனை தொடர்ந்து பேசிய பிரேமலதா எண்ணியிலடங்காத பொய்யான வாக்குறுதிகளை அளித்து தில்லு முல்லு கட்சி என்பதை திமுக நிருபித்துள்ளதாகவும், தமிழகத்திலுள்ள கட்சிகள் கூட்டணி அமைக்காமல் பணம் கொடுக்காமல் தேர்தலில் நின்று வெற்றி பெற முடியுமா தேமுதிக போட்டியிட தாயாராக உள்ளது எங்களை போன்று போட்டியிட தயாரா என சவால் விடுவதாக கூறினார்.
திமுக ஆட்சிக்கு வந்தால் அதிமுக அமைச்சர்கள் வீட்டிற்கு ரெய்டு அனுப்புவது அதுவும் ஒரே அமைச்சர் வீட்டிற்கு பத்து முறை ரெய்டு அனுப்புபவர்கள் மக்கள் முதல்வர் என கூறிக்கொள்ளும் ஸ்டாலின் மக்கள் முதல்வராக இருந்தால் தங்களது அமைச்சர்கள் வீட்டிற்கு ரெய்டு அனுப்பி உத்தமர்கள் என நிருபியுங்கள் எனவும் வீடு வீடாக பணம் கொடுத்து திமுக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதாக குற்றஞ்சாட்டினார்.
திமுக ஆட்சிக்கு வந்தால் ஆயிரம் தடுப்பனைகள் கட்டுவோம் என கூறி ஒரு தடுப்பனையை கூட திமுக கட்டவில்லை என்றும் திமுக அதிமுக ஆட்சியில் எந்த அனையும் கட்டப்படவில்லை ஆட்சிகள் தான் மாறுகிறது காட்சிகள் மாறவில்லை, எப்படி தான் உயர்கல்வி துறை அமைச்சராக பொன்முடி ஆனார் என தெரியவில்லை.
இன்று தமிழகத்திலுள்ள பள்ளி கல்லூரிகளில் அருகில் தான் அதிகளவு கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளது எதை கேட்டாலும் மத்திய அரசு மீது பழி போடும் அரசாகவும் மக்களை ஏமாற்றும் அரசாக திமுக அரசு உள்ளதாக தெரிவித்தார்.
தமிழகத்தில் நடைபெற்ற ஊழலுக்கு காரணம் திமுக அதிமுக என்றும் டாஸ்மாக்கை மூடுவதாக திமுக வாக்குறுதி அளித்துவிட்டு அதை நிறைவேற்றவில்லை, பெண்களுக்கு ஆயிரம் கொடுப்பதாக கூறிவிட்டு மாணவிகளுக்கு கொடுப்பதாக திமுக அரசு ஏமாற்றுகிறது.
கெஜ்ரிவால் ஊழல் இல்லாத ஆட்சி நடத்துகிறார் அவரிடம் உழல் இல்லா ஆட்சி நடத்தவதற்கான அட்வைஸ்சை கேட்டு ஸ்டாலின் நடந்து கொள்ள வேண்டும் என பிரேமலதா விஜயகாந்த கூறினார்.
எங்கள் மீது எத்தனை வழக்குகள் வேண்டுமென்றால் போடுங்கள் நாங்கள் அதற்கெல்லாம் அஞ்சமாட்டோம் கிழியாத சட்டையை போட்டுகொண்டு எதிர்கட்சிதலைவராக போட்டோ ஷீட் நடத்திய ஸ்டாலின் தற்போது கோர்ட் ஷீட் போட்டு போட்டோ ஷீட் நடத்துவதாகவும் சிங்கப்பூருக்கு இணையான சென்னை என கூறி சீரழிக்கும் வேலையை தான் இரு ஆட்சிகளும் நடத்துவதாக
பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.