வாங்கியது 4.23%… போனது மாநில அந்தஸ்து… மாம்பழம் சின்னம் கிடைக்குமா? தேர்தல் ஆணையத்துக்கு பாமக கடிதம்!
Author: Udayachandran RadhaKrishnan18 June 2024, 2:22 pm
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு அடுத்த மாதம் 10-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இத்தேர்தலில் திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிக்கப்பட்டிருந்தார். அதிமுக இந்த தேர்தலை புறக்கணிப்பபதாகவும், ஜனநாயக முறைப்படி தேர்தல் நடக்குமா என்பது சந்தேகமாக உள்ளதால் போட்டியிடவில்லை என அதிமுக விளக்கமளித்திருந்தது.
இதையடுத்து தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இவர் நாளை வேட்புமனு தாக்கல் செய்வார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மாம்பழம் சின்னம் கேட்டு இந்திய தேர்தல் ஆணையத்திற்கு பா.ம.க. சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அக்கடிதத்தில் கடந்த பல தேர்தல்களில் பா.ம.க. மாம்பழம் சின்னத்தில் போட்டியிட்டுள்ளது.
அதனால் இந்த தேர்தலிலும் பா.ம.க.வுக்கு மாம்பழ சின்னம் ஒதுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது. நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் 4.23 சதவீத வாக்குகளை பெற்று மாநில கட்சி அந்தஸ்தை பாம.க இழந்தது என்பது குறிப்பிடத்தக்கது.