நீட் எதிர்ப்பு கையெழுத்து போராட்டத்தில் உங்க கையெழுத்தை போட முடியுமா? ஆர்பி உதயகுமாருக்கு அமைச்சர் உதயநிதி சவால்!!

Author: Udayachandran RadhaKrishnan
21 September 2023, 10:32 am

திமுக நீட் எதிர்ப்பு கையெழுத்து போராட்டத்தில் உங்க கையெழுத்தை போட முடியுமா? ஆர்பி உதயகுமாருக்கு அமைச்சர் உதயநிதி சவால்!!

மதுரை வண்டியூர் பகுதியில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவரது சிலை திறந்து வைத்து 100 அடி கொடி மரத்தில் கட்சிக் கொடியினை ஏற்றி வைத்த தமிழ்நாடு இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்றார்.

இந்த கூட்டத்தில் அமைச்சர மூர்த்தி திமுக மாவட்ட செயலாளர்கள் மணிமாறன், எம்.எல்.ஏ தளபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விழா மேடையல் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்: இளைஞர் அணி மாநாடு நடத்துவது தொடர்பாக காஞ்சிபுரம் முதல் இளைஞர் அணி செயல்வீரர் கூட்டத்தை துவங்கி மாவட்டம் தோறும் நடத்தி வருகிறோம்.

இன்று காலையில் மதுரையில் 500 மகளிருக்கு உரிமைத் தொகைக்காக ஏ.டி.எம் கார்டு வழங்கினேன். அதைத் தொடர்ந்து மேலூரில் திமுக வடக்கு மாவட்டம் சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்று கழகத்தின் மூத்த முன்னோடிகள் 1500 பேருக்கு பொற்கிளி வழங்கினேன். தற்போது கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கலைஞரின் திருவுருவச் சிலையை திறந்து வைத்து, 100 அடி கொடி கம்பத்தில் இரு வண்ணக் கட்சி கொடியை ஏற்றி வைத்து இந்த இளைஞரணி செயல் வீரர்கள் கலந்து கொண்டு இருக்கிறேன்.

மதுரை தான் திமுக இளைஞர் அணியின் தாய் வீடு. மதுரை ஜான்சி ராணி பூங்காவில் தான் 1980 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இந்தியாவிலேயே துவங்கப்பட்ட முதல் இளைஞர் அணி திமுகவுடையதுதான், நமது இளைஞர் அணி இந்தியாவிற்கே முன்னுதாரணமாக திகழ்ந்தது.

நான் 2017 ஆம் ஆண்டு அரசியலுக்கு வருவதற்கு முன்பாக அமைச்சர் மூர்த்தி என்னை மதுரை அழைத்து மூத்த கழக முன்னோடிகளுக்கு பொற்கிளி வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க வைத்தார். அன்று துவங்கி தமிழ்நாடு முழுவதும் சென்று நிகழ்ச்சியில் பங்கேற்றுக் வருகிறேன். அதற்கு விதை போட்டவர் அமைச்சர் மூர்த்தி தான்.

செயல் வீரர் யார்? தலைவர் கட்டளை இட்டால் அதை சொன்னபடி செய்பவர்தான் செயல் வீரர். அப்படி பார்த்தால்! அமைச்சர் மூர்த்திதான் முதல் செயல் வீரர். மதுரையின் மாவட்ட செயலாளர்கள் மணிமாறன், தளபதி, மூர்த்தி மூவேந்தராக செயல்பட்டு வருகிறார்.

திராவிட முன்னேற்றக் கழகத்தில் உண்மையாக உழைத்தால் பதவி உயர்வு கிடைக்கும் அதன் அடிப்படையில் இளைஞர் அணியில் பலருக்கு பதவி உயர்வு கிடைத்து இருக்கிறது.

ஆர்.பி உதயக்குமார் நீட் தேர்வு ரத்து குறித்த ரகசியத்தை என்னிடம் கேட்க சொல்கிறார்?. நான் இப்போது சொல்கிறேன், திமுக சார்பில் நீட் தேர்வுக்கு எதிராக கையெழுத்து இயக்கத்தை துவங்கி வைக்கிறேன், அரசு தொடர்ந்து நீட் தேர்வுக்கு எதிராக செயல்பட்டு சட்டப் போராட்டம் நடத்தி வருகிறது.

முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமாருக்கு திராணி இருந்தால் திமுக நடத்து கையெழுத்து இயக்கத்தில் பங்கேற்று நீட் தேர்வுக்கு எதிராக கையெழுத்து இட முடியுமா?.

ஜல்லிக்கட்டு மக்கள் இயக்கமாக மாற்றி வெற்றி பெற்றது போல நீட் தேர்வை மக்கள் இயக்கமாக மாற்றி வெற்றி பெறலாம். இப்போது நான் பேசிய ஒரு வார்த்தையை கடந்த பத்து நாட்களாக உலகம் முழுவது பேசி வருகிறார்கள் ஆம் சனாதனம் தான்!.

சனாதன எதிர்ப்பு மாநாட்டு நான் ஒரு 10 நிமிடம் பேசிய பேச்சை திரித்து கூறி வருகின்றனர். ஏன் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் அதற்கு ஓர் உதாரணம் தருகிறேன், இந்தியாவின் முதல் குடிமகள் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மூவுக்கு பாராளுமன்ற திறப்பு விழாவிற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

நாடாளுமன்ற முதல் நாள் கூட்டத்தில் நடிகை எல்லாம் பங்கேற்கிறார்கள், பழங்குடியினத்தைச் சேர்ந்தவர் விதவைப் பெண் என்பதால் குடியரசுத்தலைவருக்கு அழைப்பு இல்லை இதுதான் சனாதனம், இதனால்தான் இதை ஒழிக்க வேண்டும் என கூறி வருகிறேன்.

பிறப்பொக்கும் எல்லா உயிருக்கு பிறப்பால் உயர்வு தாழ்வு இல்லை என்பதுதான் திராவிட கழகத்தின் சமூக நீதிக் கொள்கை.

நீ பார்த்த வேலையை நீ பார் நான் பார்த்த வேலையை நான் பார்ப்பேன் பெண்களுக்கு கல்வி கொடுக்கக் கூடாது என்பதுதான் சனாதனம்.
அதை எதிர்த்து நான் இப்ப பேசவில்லை அம்பேத்கர், அறிஞர் அண்ணா, பெரியார், கலைஞர் எல்லோரும் பேசி வந்தனர்.

பத்திரிகையாளர்களிடம் சவால் விட்டேன் என்னை இவ்வளவு கேள்வி.
அதிமுகவினரிடம் கேள்வி கேட்க, அதிமுக ஜெயலலிதா இறந்த பின் அண்ணா திமுகவாக இல்லை, அமித்ஷா திமுகவாக மாறிவிட்டது. பாஜகவிற்கு அடிமையாக இருக்கிறது.

பத்திரிக்கையாளர்களின் சனாதனம் குறித்த கேள்வி கேட்ட போது உதயநிதி ஸ்டாலின் பேசியது தவறுதான் என கூறியிருக்கிறார் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ.

சனாதனத்தை பற்றி நீங்கள் என்ன சொல்வது? உங்கள் கட்சி பெயர் கொடியில் இருக்கும் அண்ணா என்ன சொன்னார் தெரியுமா?.

“சனாதன சேற்று இருந்து நம் மக்கள் வெளியேறாதது வருத்தம் அளிக்கிறது இன்னமும் சிலர் அதை சந்தனம் என நினைக்கின்றனர். அதனை நினைத்து நான் வெட்கமும் வேதனையும் படுகிறேன். இது உதயநிதி ஸ்டாலின் சொன்னது இல்லை அண்ணா சொன்னது.”

செல்லூர் ராஜூ அவர்களே தெம்பு திராணி இருந்தால் இதை பேசுங்கள் பார்ப்போம். உங்களது கொள்கை என்ன என்பதை சொல்ல முடியுமா?.

பிரதமர் மோடி என்ன சொல்கிறார் திமுக ஆட்சியில் வாழ்வது ஒரே ஒரு குடும்பம் தான் கருணாநிதியின் குடும்பம் தான் என்று கூறுகிறார் ஆம் கருணாநிதியின் குடும்பம் தான் கருணாநிதியின் குடும்பம் இந்த தமிழ்நாடு மக்கள் தான்.

பிரதமர் மோடி நான் பிரதமர் ஆனால் இந்தியாவை வல்லரசாக மாற்றிக் காட்டுவேன் என கூறினார், ஆனால் இன்று 2047-ல் இந்தியாவை வல்லரசாக மாற்றிக் காட்டுகின்றன என பேசுகிறார்.

இந்தியாவை மாற்றிக் காட்டுவேன் என்று கூறினார் இந்தியா என்ற பெயரை பாரத் என்று மாற்றி இருக்கிறார். மோடி ஆட்சி காலத்தில் வாழ்வது அவரின் நெருங்கிய நண்பரான அதானி மட்டுமே. அதானி போர்ட், அதானி ரயில் நிலையம், அதானி ஸ்டேடியம் என பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தையும் அதானிக்கு கொடுத்து விட்டார்.

மத்திய அரசு பல்வேறு ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டு இருக்கிறது இதற்கு தக்க பதிலடி கொடுக்க மக்கள் தயாராக இருக்கின்றனர்.

எனவே இதற்கான முன்னோட்டமாக வரவிருக்கும் சேலத்தில் டிசம்பர் 17ல் இளைஞர் அணி மாநாடு இருக்கப் போகிறது. அதற்கு இளைஞர் அணி தம்பிகள் எழுச்சியுடன் குடும்பத்தினருடன் பங்கேற்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்”,. எனக் கூறினார்.

  • Ajith exits Neeruku Ner விஜய் படத்திற்கு NO சொன்ன அஜித்..அடுத்தடுத்து விலகிய பிரபலங்கள்..!
  • Views: - 400

    0

    0