உங்க மகன் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு லூலூ விவகாரம் பற்றி பேசலாமே? விக்கிரமராஜாவை விளாசிய அதிமுக!!

Author: Udayachandran RadhaKrishnan
22 June 2023, 4:55 pm

திமுக தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து தொழில்துறை வளர்ச்சிக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது துபாய்யை சேர்ந்த லுலு குழுமம் ரூ.3,500 கோடியை தமிழகத்தில் முதலீடு செய்ய தமிழக அரசுடன் ஒப்பந்தம் செய்தது.

அதன்படி கோவையில் லுலு மார்க்கெட்டை தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா திறந்து வைத்தார். இதனையடுத்து, சென்னையில் தனது கிளையை தொடங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கு தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.

மத்திய, மாநில அரசுகள் வணிகர்களை பாதிக்கும் வகையில் மிக பெரிய லூலூ மால் போன்ற மால்களை திறக்க அனுமதிக்க கூடாது, கார்பரேட் நிறுவனங்கள் நேரடியாக நெல் கொள்முதல் செய்ய அனுமதிக்க கூடாது என தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக முதல்வரை சந்திக்க உள்ளதாக விக்கிரமராஜா கூறியிருந்தார். இந்நிலையில், வணிகர் சங்கத் தலைவரின் மகன், விருகம்பாக்கம் எம்.எல்.ஏ பிரபாகர் ராஜா பதவியை ராஜினாமா செய்து எதிர்க்கலாமே? என சிங்கை ராமசந்திரன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அதிமுக கோவை மண்டல ஐடி விங் செயலாளர் சிங்கை ராமசந்திரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- தமிழகத்தில் 3500 கோடியில் லூலூ ஹைபர் மால்களை அமைக்க மு.க.ஸ்டாலின் ஒப்பந்தம் போட்டார். அண்மையில் திமுக தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா தான் கோவையில் திறந்து வைத்தார்.

சிறுவணிகர்களை பாதிக்கும் கார்ப்பொரேட் நிறுவனத்துக்கு ஆதரவாக திமுக செயல்படுவதை கண்டிப்பது உண்மையென்றால் வணிகர் சங்கத் தலைவரின் மகன், விருகம்பாக்கம் எம்.எல்.ஏ பிரபாகர் ராஜா பதவியை ராஜினாமா செய்து எதிர்க்கலாமே? என கேள்வி எழுப்பியுள்ளார்.

  • Tamannaah Bhatia and Vijay Varma part ways after years of dating காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!