ஆர்டர் போட்டும் கேன்சல்.. கடுப்பான வாடிக்கையாளர் : வீட்டின் முன் குவிந்த ஸ்விக்கி ஊழியர்களால் பரபரப்பு!!
Author: Udayachandran RadhaKrishnan16 December 2023, 8:27 pm
ஆர்டர் போட்டும் கேன்சல்.. கடுப்பான வாடிக்கையாளர் : வீட்டின் முன் குவிந்த ஸ்விக்க ஊழியர்களால் பரபரப்பு!!
ஸ்விக்கி மற்றும் சோமேட்டோ மத்தியில் எப்போதும் பெரும் போட்டி இருந்தாலும், ஸ்விக்கி ஆரம்பம் முதல் தன் மீது, தன் சேவை மீது விசுவாசம் அதிகம் கொண்ட வாடிக்கையாளர்களை அதிகளவில் கொண்டு உள்ளது.
குறிப்பாக டெக் ஊழியர்கள் மத்தியில் ஸ்விக்கி விருப்ப சேவையாகப் பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் கூர்கான் நகரில் பெயின் அண்ட் கம்பெனி-யில் சீனியர் அசோசியேட் ஊழியராகப் பணியாற்றும் லோயா என்பவர் வியாழக்கிழமை ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் தளத்தில் வீட்டுக்கு தேவையான சில பொருட்களை ஆர்டர் செய்துள்ளார்.
தனது வீட்டுக்கு தேவையான பால், தோசை மாவு, அன்னாசி பழம் ஆகியவற்றை ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் ஆப்-ல் ஆர்டர் செய்துளார். ஆர்டர் செய்யப்பட்டு, பணம் வங்கி கணக்கில் கழிக்கப்பட்ட பின்பு ஆர்டர் கேன்சல் எனக் காட்டியுள்ளது.
இதனால் மீண்டும் ஆர்டர் செய்ய முயற்சி செய்த போது மீண்டும் அதேபோல் ஆனது. கடுப்பான அவர் கேஷ்ஆன் டெலிவரி ஆஃப்ஷன் மூலம் ஆர்டர் செய்துள்ளார், அதிலும் 2-3 முறை இதே பிரச்சனை நடந்துள்ளது.
இதைத் தொடர்ந்து ZEPTO-வில் ஆர்டர் செய்து பொருட்களைப் பெற்றுள்ளார். ஆனால் இதற்குப் பின்பு தான் சம்பவமே நடந்துள்ளது. கேன்சல் எனப் பதிவான ஸ்விக்கி ஆர்டர் அனைத்தும் டெலிவரி செய்யப்பட டெலிவரி ஊழியர்கள் அடுத்தடுத்து கால் செய்தும், வீட்டின் காலிங் பெல் அடித்தும் அவருடைய வீடே ஸ்விக்கி ஊழியர்களால் நிரம்பியுள்ளது.
தற்போது அவரின் வீட்டில் 20 லிட்டர் பால், 6 கிலோ தோசை மாவு, 6 பாக்கெட் அண்ணாச்சி பழம் ஆகியவை உள்ளது. இதுகுறித்து பெயின் அண்ட் கம்பெனி-யில் சீனியர் அசோசியேட் ஊழியரான லோயா ஸ்விக்கி தளத்தில் புகார் அளித்தும் பலன் அளிக்கவில்லை.
l