முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி மீதான டெண்டர் வழக்கு ரத்து : திமுகவோட பீ டீம் போட்ட பொய் வழக்கு.. அதிமுக வழக்கறிஞர் பரபர!!
Author: Udayachandran RadhaKrishnan30 November 2022, 3:34 pm
மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் கோரியதில் முறைகேடுகள் செய்ததாகவும், வருமானத்துக்க அதிகமாக சொத்து சேர்த்ததாகவும் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சென்னை ஐகோர்ட்டில் மனுக்களை தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்குகள் நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் ஆர்.எம்.டி.டீக்காராமன் அமர்வில் விசாரணை நடைபெற்றன. அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தாக்கல் செய்திருந்த வழக்குகளின் மீதான தீர்ப்பை 30ஆம் தேதி அறிவிக்கப்படும் என தெரிவித்தனர்.
இந்த நிலையில் இன்று இந்த வழக்கு குறித்த தீர்ப்பை நீதிபதிகள் வாசித்தனர். அப்போது முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி மீதான டெண்டர் வழக்குகளை ரத்து செய்வதாக அறிவித்தனர்.
மேலும் சொத்துக்குவிப்பு வழக்கை தள்ளுபடி செய்ய கோரிய மனுவை தள்ளுபடி செய்து உர்ததரவிட்டனர்.
இது குறித்து அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை செய்தியாளர்களிடம் பேசும் போது, டெண்டர் புகார் பொய் என்பதை ஆரம்பித்தில் இருந்தே கூறி வந்தோம். மேலும் திமுகவின் பீ டீம்மாக செயல்பட்ட அறப்போர் இயக்கம் தான் கூறியது. தற்போது அந்த வழக்கை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
விரைவில் சொத்துக்குவிப்பு வழக்கும் ஒண்ணுமில்லாமல் போகும், அதற்கான நடவடிக்கை எடுத்து வருகிறோம்.