இடைத்தேர்தலில் வேட்பாளர்கள் ஆர்வக்கோளாறு… ஓட்டுப் போட வந்த வேட்பாளர்களுடன் துணை ராணுவப்படை வாக்குவாதம்!!
Author: Udayachandran RadhaKrishnan27 February 2023, 8:59 am
தமிழகமே உற்று நோக்கி வந்த ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலின் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், வாக்களிப்பதற்காக கட்சித்துண்டு, வேட்டியுடன் வாக்குச்சாவடிக்கு வந்த தேமுதிக வேட்பாளர் ஆனந்திற்கு தேர்தல் அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனையடுத்து தேர்தல் அதிகாரிகளின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து ஆனந்த் கட்சி அடையாளமின்றி வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தார். கலைமகள் பள்ளியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகாவும் வாக்களித்தார்.
இதே போல அக்ரஹாரம் பகுதிக்கு வந்த அதிமுக வேட்பாளர் தென்னரசுவுடன் துணை ராணுவப்படை வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கட்சி துணை மற்றும் கட்சி அடையாளத்துடன் கரை வேட்டி அணிந்து வந்ததால் எதிர்ப்பு தெரிவித்தனர்.