காவிரி ஒழுங்காற்று குழுவை மதிக்காத கர்நாடகா.. தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது : டிகே சிவக்குமார் திட்டவட்டம்!!

Author: Udayachandran RadhaKrishnan
30 October 2023, 8:00 pm

காவிரி ஒழுங்காற்று குழுவை மதிக்காத கர்நாடகா.. தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது : டிகே சிவக்குமார் திட்டவட்டம்!!

தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு விநாடிக்கு 2600 கன அடி நீர் திறந்துவிட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு காவிரி நீர் ஒழுங்காற்று குழு பரிந்துரைத்தது. நவம்பர் 1ம் தேதி முதல் 15ம் தேதி வரை காவிரியில் இருந்து வினாடிக்கு 2600 கன அடி நீர் திறக்குமாறு பரிந்துரைத்தது.

இந்நிலையில், கர்நாடகாவில் நீர்வரத்து பூஜ்ஜியமாக உள்ளதால் தண்ணீர் திறக்க முடியாத சூழல் உள்ளதாக அம்மாநில கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில்,” தமிழகத்திற்கு தற்போத கர்நாடகா தண்ணீர் திறக்கும் நிலையில் இல்லை. கர்நாடகா அணைகளில் மொத்தமாக 551 டி.எம்.சி தண்ணீர் மட்டுமே உள்ளது. இது குடிநீருக்கு மட்டுமே போதுமானது” என்று கூறியுள்ளார்.

தமிழகத்திற்கு 23 நாட்களுக்கு விநாடிக்கு 2600 கனஅடி நீர் திறந்துவிட காவிரி நீர் திறந்துவிட காவிரி நீர் ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்துள்ள நிலையில் மறுப்பு தெரிவித்துள்ளார்.

  • tvk leader vijay statement on waqf amendment bill இதுதான் பாஜகவின் பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்- அறிக்கையால் அலறவிட்ட தவெக தலைவர் விஜய்…