எம்பி சீட் கிடைக்காதோ? தமிழக காங்., தலைவர் பதவியை குறி வைத்த கார்த்தி சிதம்பரம்.. காரணம் இதுவா?!!

Author: Udayachandran RadhaKrishnan
19 March 2023, 1:01 pm

காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, பிளஸ் டூ மற்றும் பிளஸ் ஒன் பொதுத் தேர்வில் 50,000 மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கு வரவில்லை என்பது அதிர்ச்சிகரமான தகவலாக இருப்பதாக கூறினார்.

மாணவர்கள் உண்மை தன்மையை எதனால் நடந்தது என்பது குறித்து அமைச்சர் மற்றும் பள்ளி கல்வித்துறை ஆய்வு நடத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவி கொடுத்தால் நான் ஏற்றுக் கொள்ள தயாராக உள்ளதாக தெரிவித்த அவர், பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை சித்தாந்த ரீதியாக பாஜகவில் சேரவில்லையென்றும், ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்காததால் அண்ணாமலை பாஜகவில் சேர்ந்ததாகவும் தெரிவித்தார்.

ஆன்லைன் ரம்மியை ஒரு மாநிலத்தில் மட்டும் கட்டுப்படுத்த முடியாது தேசிய அளவில் கட்டுப்படுத்தினால் மட்டுமே இது சாத்தியமாகும்.

நீட் தமிழகத்தில் உணர்வுபூர்வமான பிரச்சினையாக மாறிவிட்டது அவ்வாறு அதை பார்க்கக் கூடாது. மருத்துவக் கல்லூரிக்கு எந்த அடிப்படையில் மாணவர்களை சேர்க்கை நடைபெற வேண்டும் என்பதை தான் பார்க்க வேண்டும் என கூறினார்.

மாநிலத்தில் இருக்கும் மருத்துவக் கல்லூரிக்கு மத்திய தேர்வு ஏன் இருக்க வேண்டும் என்ற கேள்வி நியாயமான கேள்வி நீதிமன்றத்தின் மூலமாக இதற்கு தீர்வு காணலாம் என்று தமிழக அரசு நம்புவதாக தெரிவித்தார்.

தமிழக காங்கிரஸ் பதவியை தனக்கு தாருங்கள் என கார்த்தி சிதம்பரம் கேட்டுள்ளது தமிழக சீனயர் காங்கிரஸ் தலைவர்களிடையே புகைக்சசலை ஏற்படுத்தியுள்ளது.

வரும் 2024ல் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை சீட் கிடைக்கும் என தெரியாதபட்சத்தில், ஒரு வேளை தனக்கு எம்பி தொகுதி வேட்பாளர் ஆக வாய்ப்பு கிடைக்காதோ என எண்ணியோ தற்போது கார்த்தி சிதம்பரம் காங், தலைவர் பதவியை குறி வைத்து துண்டை போட்டுள்ளார் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்ப.

  • Squid Game Season 2 Review and Explain the Endingஸ்குவிட் கேம் சீசன் 2 : முதல் சீசன் ஒரு பார்வை மற்றும் இரண்டாவது சீசன் விமர்சனம்!!
  • Views: - 445

    0

    0