நியாப்படுத்தவே முடியாது.. இறுதிப்பட்டியல் எங்கே? அலட்சியத்தில் டிஎன்பிஎஸ்சி : தமிழக அரசுக்கு அன்புமணி எச்சரிக்கை!
பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: “தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் உதவியாளர்/ உதவி பிரிவு அலுவலர் பணிக்கான தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தொகுதி V-A தேர்வு கடந்த 2022-ஆம் ஆண்டு டிசம்பர் 18-ஆம் நாள் நடைபெற்ற நிலையில், அதன்பின் 15 மாதங்களாகியும் தேர்வில் தேர்ச்சி பெற்றோரின் இறுதிப் பட்டியல் இன்னும் வெளியிடப்படவில்லை. அதனால் தலைமைச் செயலக பணிக்கான தேர்வு எழுதிய தேர்வர்கள் கடுமையான மன உளைச்சல் அடைந்துள்ளனர்.
தலைமைச் செயலக உதவியாளர்/ உதவிப் பிரிவு அலுவலர் பணிக்கான தேர்வில் வெற்றி பெற்றோரின் பட்டியல் வெளியிடப்படாததற்கு தமிழ்நாடு அரசுப் பனியாளர் தேர்வாணையத்தின் அலட்சியம் தான் காரணம் ஆகும்.
2022-ஆம் ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற தேர்வின் முடிவுகள் 8 மாதங்களுக்குப் பிறகு 2023 டிசம்பர் ஒன்றாம் நாள் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து அக்டோபர் 14-ஆம் நாள் சான்றிதழ் சரிபார்ப்பு இணையவழியில் நடைபெற்றது.
தேர்வாணையம் நினைத்திருந்தால் அடுத்த ஒரு வாரத்தில் தேர்ச்சி பெற்றோர் பட்டியலை வெளியிட்டு, அடுத்த சில வாரங்களில் கலந்தாய்வு நடத்தி முடித்திருக்க முடியும். ஆனால், சான்றிதழ் சரிபார்ப்பு முடிவடைந்து 5 மாதங்களாகி விட்ட நிலையில் இன்னும் இறுதிப் பட்டியல் தயாரிக்கப்படவில்லை.
இந்த தாமதத்தை நியாயப்படுத்த முடியாது. இறுதிப் பட்டியல் இன்னும் வெளியிடப்படாததால் தேர்வு எழுதி சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்ற 658 பேரும் தங்களுக்கு வேலை கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பிலும், மன உளைச்சலிலும் வாடிக் கொண்டிருக்கின்றனர். அவர்களை இனியும் காத்திருக்க வைக்கக் கூடாது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் உடனடியாக தொகுதி V-A பணிக்கான தேர்வில் வெற்றி பெற்றவர்களின் இறுதிப் பட்டியலை வெளியிட வேண்டும். அதனடிப்படையில் இம்மாத இறுதிக்குள் கலந்தாய்வு நடத்தி , பணி நியமன ஆணைகளை வழங்க தேர்வாணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே கொளத்தூரை சேர்ந்தவர் செல்லப்பன். இவரது 2 ஆவது மகள் விக்னேஸ்வரி (24). பிள்ளைப்பாக்கம் சிப்காட்டில்…
தோல்வி இயக்குனருடன் கூட்டணியா? “விடுதலை 2” திரைப்படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி “ஏஸ்”, “டிரெயின்” ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும்…
அதிரிபுதிரி ஹிட்… “லூசிஃபர்” திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக வெளிவந்த “எம்புரான்” திரைப்படம் கடந்த மாதம் 27 ஆம் தேதி வெளியான…
தமிழக சட்டப்பேரவையில் இன்று கச்சத்தீவு மீட்பது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்துக்கு அனைத்து…
கலவையான விமர்சனம் எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் கடந்த மாதம் இறுதியில் வெளியான “வீர தீர சூரன் பார்ட்…
தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கிய நடிகர் விஜய், தனது கடைசி படம் ஜனநாயகன்தான் என அறிவித்திருந்தார். கடைசி…
This website uses cookies.