கேரளா : மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது கார் திடீரென தீப்பிடித்ததில் கர்ப்பிணி பெண்- கணவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் அருகே பெண் ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து அவரது குடும்பத்தினர் அவரை அங்குள்ள தலைமை மருத்துவமனைக்கு காரில் அழைத்து சென்று கொண்டிருந்தனர். காரின் முன்பகுதியில் கர்ப்பிணி பெண் அமர்ந்திருந்தார். காரை பெண்ணின் கணவர் ஓட்டிச் சென்றார். காரின் பின்பகுதியில் அவர்களின் உறவினர்கள் அமர்ந்திருந்தனர்.
இந்நிலையில், கார் ஓடிக்கொண்டிருந்தபோதே திடீரென காருக்குள் புகை எழும்பி தீ பற்றியது. தீ பரவுவதை கண்டு அதிர்ச்சியடைந்து அவர்கள் காரை உடனடியாக நிறுத்தினர். ஆனால், தீ அதற்குள் மளமளவென பரவியது. இதில் காரின் முன்பக்க கதவுகள் இரண்டும் திறக்க முடியாமல் போனது. இதில், கர்ப்பிணி பெண்ணும், அவரது கணவரும் தீயில் சிக்கி உடல் கருகி உயிரிழந்தனர். பின்பக்க காரில் இருந்த உறவினர்கள் கதவை திறந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
This website uses cookies.