கார் பந்தயம் அனாவசியம்.. முதல்ல அதை பண்ணுங்க.. இல்லனா அரசுக்கு நெருக்கடிதான் ; அண்ணாமலை வார்னிங்!

தமிழகத்தின் அரசு துறைகளில் மிக முக்கியமான துறையாக போக்குவரத்து துறை இருக்கிறது. இந்த துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு கிட்டத்தட்ட எட்டு வருடங்களாக அகவிலைப்படி உயர்வு வழங்காமல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. மேலும் கடந்த ஒன்றரை வருடமாக ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ஓய்வு கால பலன்களை வழங்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்திருக்கும் நிலையில் போராட்டம் நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை ஊழியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்நிலையில் அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டுமென பல்வேறு அரசியல் கட்சிகளும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் அவர்களுக்கு பணப் பலன்களை உடனே தர வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறார் தமிழக பாஜக தலைவரான அண்ணாமலை. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு, கடந்த எட்டரை வருடங்களாக, அதாவது 102 மாதங்களாக, அகவிலைப்படி உயர்வு வழங்காமல் தமிழக அரசு நிறுத்தி வைத்திருக்கிறது.

மேலும், கடந்த 18 மாதங்களாக, ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு, ஓய்வுக் காலப் பணப் பலனையும் வழங்காமல் இருப்பதாகத் தெரிகிறது. கடந்த 8 ஆண்டுகளில், தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள், சுமார் 93,000 தொழிலாளர்கள் உள்ளனர்.

இவர்களுக்கான அகவிலைப்படி உயர்வு வழங்கப்படாமலும், ஓய்வூதியத்தை முறைப்படுத்தாமலும், வயது முதிர்ந்த காலத்தில், மிகக் குறைந்த அளவில் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். பல முறை தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்தும், கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் உயர்நீதிமன்றமே, அகவிலைப்படி உயர்வு வழங்கக் கூறி தீர்ப்பளித்த பின்னரும், திமுக அரசு, இதுவரை ஓய்வு பெற்றோருக்கான அகவிலைப்படி உயர்வை வழங்காமல் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இது தொடர்பாக, ஓய்வூதியதாரர்கள் பலமுறை அரசின் கவன ஈர்ப்புப் போராட்டங்கள் நடத்தியுள்ளனர்.

மேலும், ஒவ்வொரு ஆண்டும், வேறு வழியின்றி, பொங்கல் பண்டிகை நேரத்தில், போக்குவரத்துத் துறை ஊழியர்கள் வேலை நிறுத்தம் அறிவிப்பதும், அந்த நேரத்தில் பொய்யான வாக்குறுதிகள் கொடுத்து அவர்களைச் சமாதானப்படுத்தி, பின்னர் அவர்கள் கோரிக்கைகளைக் கிடப்பில் போடுவதும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

இதனால், பொதுமக்களும் அவதிக்குள்ளாகின்றார்கள். எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக, ஓய்வு பெற்றவர்களை அலைக்கழிப்பதை நிச்சயம் ஏற்றுக் கொள்ள முடியாது. திமுக அரசு உண்மையில் எதற்கு முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டிருக்கிறது? அரசுத் துறைகளில் பல ஆண்டுகள் சேவை செய்து ஓய்வு பெற்றவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு நிதி ஒதுக்காமல், கார் பந்தயம் போன்ற அனாவசியச் செலவுகளுக்குப் பெருமளவில் நிதி ஒதுக்கிக் கொண்டிருக்கிறது.

பொதுமக்களின் வரிப்பணம், பொதுமக்களுக்கான சேவைகளுக்கே தவிர, திமுகவினர் கேளிக்கைகளுக்கு அல்ல. உடனடியாக, அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் இருந்து ஓய்வு பெற்றவர்களின் நியாயமான கோரிக்கைகளான, ஓய்வூதியத்தை முறைப்படுத்தி, கடந்த 102 மாதங்களாக வழங்கப்படாமல் இருக்கும் அகவிலைப்படி உயர்வு, ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு மருத்துவக் காப்பீடு, கடந்த 18 மாதங்களாக வழங்கப்படாமல் இருக்கும் ஓய்வுக்கால பணப்பலன் ஆகியவற்றை உடனே நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

பொங்கல் பண்டிகை வரை இழுத்தடித்து, மீண்டும் வழக்கம்போல போராட்டத்தில் ஈடுபடும் சூழலுக்குப் போக்குவரத்துத் துறை ஊழியர்களைத் தள்ள வேண்டாம் என்றும் எச்சரித்துக் கொள்கிறேன்.” என கூறியுள்ளார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

பிரபல தொழிலதிபரின் மகளை காதலிக்கும் அனிருத்.? இவங்களுக்குள்ள இப்படி ஒரு கனெக்ஷனா?

இந்திய இசையமைப்பாளர்களின் அதிக சம்பளம் வாங்கும் பிரபலமாக இருப்பவர் அனிருத்தான். இவர் இசையமைக்கும் அத்தனை ஆல்பமுமே ஹிட் ஆவதால் தயாரிப்பாளர்கள்…

20 minutes ago

மாவீரன் பட வசனத்தை விக்ரம் படத்திற்கு அப்படியே டைட்டிலாக வைத்த இயக்குனர்?

வித்தியாசமான கதைக்களம் சிவகார்த்திகேயனின் நடிப்பில் மடோன்னே அஸ்வின் இயக்கத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான “மாவீரன்” திரைப்படம் சிவகார்த்திகேயனின்…

1 hour ago

பிக் பாஸ் பிரபலம் தர்ஷன் திடீர் கைது… கண்ணீர் விட்டு அழுத காட்சி!

பிக் பாஸ் பிரபலம் தர்ஷன் கைது செய்யப்பட்டது சென்னையில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. நேற்று மாலை ஜிம்மில் இருந்து திரும்பிய…

1 hour ago

காதலை ஏற்க மறுத்த இளம்பெண் காரில் கடத்தல்.. கட்டாய திருமணம் செய்ய முயற்சி..இறுதியில் டுவிஸ்ட்!

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே உள்ள மேட்டு இருங்களூரை சேர்ந்த துரைசேகர் என்பவரது மகன் 25 வயதுடைய ஜெகன். பி.காம்…

2 hours ago

டிரம்ப் கணக்கு தவிடுபொடி.. பங்குச்சந்தைகள் வரலாறு காணாத சரிவு : பல லட்சம் கோடி இழப்பு!

பல்வேறு நாடுகள் மீது அமெரிக்க அதிபர் கூடுதல் வரி விதிப்பை அறிவித்ததன் எதிரொலியால் பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்துள்ளன. அமெரிக்கா…

3 hours ago

முடியப்போகுது படப்பிடிப்பு, இனி அரசியலில் சுறுசுறுப்பு, சுற்றுப்பயணத்திற்கு தயாராகும் விஜய்?

முழு நேர அரசியலில் விஜய் தனது கடைசி திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படத்தில் நடித்துக்கொடுத்துவிட்டு முழு நேர அரசியல்வாதியாக உருமாறவுள்ளார் விஜய்.…

4 hours ago