சாதிவாரி கண்கெடுப்பு… அமைச்சர் சிவசங்கருடன் நேருக்கு நேர் விவாதிக்க தயார் : அன்புமணி ராமதாஸ் சவால்!

Author: Udayachandran RadhaKrishnan
26 June 2024, 12:43 pm
anbu
Quick Share

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கு உரிமை உண்டு.

மாநில அரசு தான் பொருளாதார ரீதியான கணக்கெடுப்பை நடத்த முடியும். முக்கியமான சமுதாயத்திற்கு கல்வி, வேலைவாய்ப்பில் கணக்கெடுப்பு நடத்த மறுப்பது ஏன்?

மத்திய அரசுதான் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த முடியும் என முதலமைச்சர் கூறியது மோசடி. கலைஞர் ஆட்சியில் எந்த அடிப்படையில் வன்னியர், இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டது.

பீகார் முதலமைச்சரால் மட்டும் எவ்வாறு கணக்கெடுப்பு நடத்த முடிகிறது. சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து அமைச்சர் சிவசங்கருடன் நேருக்கு நேர் விவாதிக்க தயார் என்றார்.

Views: - 107

0

0