காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவது உறுதி என்று கர்நாடகா மாநில துணை முதலமைச்சர் டிகே சிவகுமார் கூறியது திமுகவுக்கு புதிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில் உற்பத்தியாகி தமிழகம் வழியாக பாய்ந்தோடி கடலில் கலக்கும் காவிரி ஆறு, தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரமாக திகழ்ந்து வருகிறது. இந்த ஆற்றின் குறுக்கே மேகதாது எனும் பகுதியில் தடுப்பணை கட்ட கர்நாடகா அரசு முயற்சித்து வருகிறது. இதனை எதிர்த்து தமிழக அரசும் சட்டப்போராட்டம் நடத்தி வருகிறது.
அண்மையில் கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்துள்ளது. முதலமைச்சராக சித்தராமையாவும், துணை முதலமைச்சராக டிகே சிவகுமாரும் பொறுப்பேற்றுக் கொண்டனர். இவர்களின் பதவியேற்பு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் உள்பட பல்வேறு முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில், காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவது உறுதி என்று கர்நாடக மாநில துணை முதலமைச்சரும், நீர்வளத்துறை அமைச்சருமான டிகே சிவக்குமார் தெரிவித்து இருப்பது தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூருவில் முதல் முறையாக நீர்வளத்துறை அதிகாரிகளுடன் டிகே சிவக்குமார் நடத்திய ஆலோசனையில், துறைரீதியாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், காங்கிரஸ் கட்சி மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றும் என்றும், கர்நாடக மாநிலத்தில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள முக்கிய திட்டம், மேகதாது அணை மற்றும் மகதாயி அணை திட்டத்தை நிறைவேற்றுவது தொடர்பாக விரைவில் டெல்லி சென்று மத்திய அமைச்சர்களை சந்திப்பேன் எனக் கூறினார். மேலும், விரைவில் அனுமதி பெறுவதற்கான பணிகளை மேற்கொள்வேன் எனக் கூறிய டிகே சிவகுமார், மேகதாது அணை கட்டுவது எங்கள் உரிமை என்றும, வேறு மாநிலங்களுக்கு துரோகம் செய்யும் எண்ணம் எங்களுக்கு இல்லை என தெரிவித்தார்.
மேகதாது அணை விவகாரத்தில் தமிழக கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ், கர்நாடகாவில் மேகதாது அணையை கட்டுவது உறுதி என கூறியிருப்பது முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் திமுக மற்றும் தமிழக காங்கிரஸ் கட்சி என்ன செய்யப் போகிறது என்பதை எதிர்கட்சிகளான அதிமுக, பாஜக உன்னிப்பாக கவனித்து வரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
நடிகர் விஜய் சினிமாவில் உச்ச நடிகராக உள்ள நிலையில் அரசியலில் ஈடுபட்டு வருகிறார். 2026ல் நடக்கும் தேர்தலை மையமாக வைத்து…
வெற்றி இயக்குனர்… சமீப காலமாகவே கோலிவுட்டின் வெற்றி இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான “விடுதலை…
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆவரங்காடு பகுதியில் ஸ்ரீ அக்னி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பூச்சாற்றுதலுடன்…
கோவை தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்த அசாம் மாநிலத்திலத்தை சேர்ந்த வாய் பேச முடியாது 14 வயது சிறுமியை பாலியல் சீண்டல்…
எகிறும் எதிர்பார்ப்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி…
This website uses cookies.