திமுக அமைச்சர்களுக்கு எதிராக கேவியட் மனு.. சட்டபோராட்டத்தை நடத்தும் பாஜக : அண்ணாமலை அறிவிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
29 October 2023, 7:44 pm

திமுக அமைச்சர்களுக்கு எதிராக கேவியட் மனு.. சட்டபோராட்டத்தை நடத்தும் பாஜக : அண்ணாமலை அறிவிப்பு!!

திமுகவின் ஒவ்வொரு ஊழல் அமைச்சருக்கும் எதிராக சட்ட போராட்டத்தை பாஜ., முன்னெடுக்கும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து, அண்ணாமலை கூறியிருப்பதாவது: திமுக அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் அவசரகதியில் முடித்து வைக்கப்பட்டுள்ளது.

மேல்முறையீடும் செய்யப்படாதது அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டை உறுதி செய்வதாக உள்ளது. ஊழல் வழக்குகளில் உச்சநீதிமன்றத்தில் தமிழக பாஜ., சார்பில் கேவியட் மனுக்கள் தாக்கல் செய்யப்படும். திமுகவின் ஒவ்வொரு ஊழல் அமைச்சருக்கும் எதிராக சட்ட போராட்டத்தை பாஜ., முன்னெடுக்கும் என அண்ணாமலை கூறினார்.

  • AR Murugadoss about SIkandar movie remake of Thalapathy's Sarkar விஜயால் ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த பெரும் சிக்கல்.. இதுதான் முடிவு!