நாங்க சிபிஐ என மிரட்டும் மெசேஜ்: பிளீஸ் நம்பாதீங்க…சிபிஐ தரும் எச்சரிக்கை…!!

Author: Sudha
7 August 2024, 8:45 am

சிபிஐ உயர் அதிகாரிகள் பெயரில் மோசடி செய்யப்படுவதாக பணம் கேட்டு மிரட்டும் கும்பலிடம் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் மோசடி புகார்களை உடனுக்குடன் காவல் நிலையத்தில் புகார் அளிக்குமாறும் சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக சிபிஐ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் சிபிஐ இயக்குனர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பெயரில் சிபிஐ பெயரை பயன்படுத்தி போலியான பிடிவாரண்ட் போலியான சம்மன் உள்ளிட்டவற்றை வாட்ஸ்அப் மற்றும் இமெயில் மூலமாக ஒரு கும்பல் அனுப்பி வருகிறது.இதைப்போன்ற தகவல்களை அனுப்பி பணம் கேட்டு மிரட்டல் விடுத்து வருகின்றனர் என்று தகவல் கிடைத்துள்ளது.

ஆகவே பொதுமக்கள் இதுபோன்ற எஸ்எம்எஸ் மற்றும் வாட்ஸ் அப் தகவல்களை கண்டு ஏமாற வேண்டாம் என சிபிஐ தெரிவித்துள்ளது. இதைப்போன்ற மிரட்டல் வந்தால் உடனடியாக சைபர் கிரைமில் புகார் செய்யும்படியும் சிபிஐ தெரிவித்துள்ளது.

  • santhanu reply to a fan that comment on vijay sethupathiவிஜய் சேதுபதியை திட்டிய ரசிகருக்கு பதிலடி கொடுத்த சாந்தனு! அப்படி என்னதான் நடந்தது?