இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் திடீர் சோதனை… விலையை உயர்த்தியதில் முறைகேடு செய்ததாக புகார்..?

Author: Babu Lakshmanan
23 December 2022, 9:10 am

சென்னையில் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் இந்திய வணிகப்போட்டி ஆணைய அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.

அண்மையில் சிமெண்ட் விலை நிர்ணயிப்பதிலும், சக நிறுவனங்களுடன் இணைந்து சிமெண்ட் விலையை உயர்த்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுமட்டுமின்றி முறையற்ற வணிக போட்டியில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்திய வணிக போட்டி ஆணைய அதிகாரிகள், சென்னையில் உள்ள இந்தியா சிமெண்ட் நிறுவன அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையையொட்டி அந்த அலுவலகத்தின் முன்பாக போலீசார் குவிக்கப்பட்டனர்.

இதனிடையே, இந்திய வணிக போட்டி ஆணைய அதிகாரிகளின் சோதனை குறித்து இந்தியா சிமெண்ட் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. அதில், இந்திய வணிக போட்டி ஆணையத்தின் அதிகாரிகள் தங்கள் அலுவலகத்தில் சோதனை நடத்தியதாகவும், தாங்கள் எந்த முறைகேடுகளிலும் ஈடுபடவில்லை என்பதை தெளிவுபடுத்தியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

  • Jason Sanjay New Movie Dropped ஆசையை காட்டி மோசம் செய்த லைகா நிறுவனம்.. விஜய் மகனுக்கு கல்தா!