கல்லூரி, பல்கலைக்கழகங்களில் கட்டாயம் சிசிடிவி : ராகிங் கொடுமையை தடுக்க யுஜிசி போட்ட அதிரடி ஆர்டர்!!
Author: Udayachandran RadhaKrishnan19 September 2022, 11:40 am
ராகிங்கை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி யுஜிசி கல்லூரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளது.
அனைத்து கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் கட்டாயம் என்று பல்கலைக்கழக மானியக்குழுவான (யூஜிசி) தெரிவித்துள்ளது.
மேலும், ரகிங்கில் ஈடுபட மாட்டேன் என்று ஒவ்வொரு மாணவரும் இணையதளத்தில் பதிவு செய்திருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் ராகிங்கை தடுக்க வகுப்பறைகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதோடு விழுப்புணர்வு வாசகங்களையும் இடம் பெற செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கல்லூரிகளுக்கு யுஜிசி கடிதம் எழுதியுள்ளது.