மறைந்த பாடகி பவதாரணியின் உடலுக்கு பிரபலங்கள் அஞ்சலி… இன்று இரவே சொந்த ஊருக்கு கொண்டு செல்ல ஏற்பாடு!!

Author: Udayachandran RadhaKrishnan
26 January 2024, 6:18 pm

மறைந்த பாடகி பவதாரணியின் உடலுக்கு பிரபலங்கள் அஞ்சலி… இன்று இரவே சொந்த ஊருக்கு கொண்டு செல்ல ஏற்பாடு!!

இளையராஜாவின் மகளும், பிரபல பாடகியுமான பவதாரிணி நேற்று ஜனவரி 25-ஆம் தேதி இலங்கையில் காலமானார். இவருடைய மறைவு பெரும் சோகத்தையே ஏற்படுத்தி இருக்கிறது.

இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இலங்கையில் சமீபத்தில் புற்றுநோய்க்கு ஆயுர்வேத மருத்துவ சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார்.

இதனையடுத்து, பாடகி பவதாரிணியின் உடலை இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு கொண்டு வருவதற்காக சகோதரர் யுவன் சங்கர் ராஜா இலங்கை இன்று காலை புறப்பட்டார். இந்த நிலையில், பவதாரிணி உடல் விமானம் மூலம் சென்னை கொண்டுவரப்பட்டது.

விமானம் நிலையம் வந்த உடன் அவரது உடலை தி நகரில் உள்ள இளையராஜாவின் வீட்டிற்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு பொதுமக்கள் மற்றும் திரைபிரபலங்கள் அஞ்சலிக்கு இன்று இரவு 10 மணி வரைக்கும் வைக்கப்பட உள்ளது.

பவதாரணியின் உடல் வந்ததும், தி நகரில் உள்ள இளையராஜாவின் வீட்டிற்கு பிரபலங்கள் வரத்தொடங்கினர். இயக்குனர்கள் வெங்கட்பிரபு, சுதா கொங்கரா, நடிகர் பிரேம்ஜி, பாரதிராஜா மகன் மனோஜ் ஆகியோர் வந்தனர்.

பொதுமக்கள் மற்றும் பிரபலங்களின் அஞ்சலிக்காக இரவு 10 மணி வரைக்கும் உடல் வைக்கப்பட்டு பின்னர் சொந்த ஊரான தேனிக்கு பவதாரணியின் உடல் கொண்டு செல்லப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 360

    0

    0