திருப்பதி கோவில் அன்னதான உணவில் பூரான்.. லட்டை தொடர்ந்து அடுத்த சர்ச்சையால் பக்தர்கள் கொந்தளிப்பு!
Author: Udayachandran RadhaKrishnan5 October 2024, 6:11 pm
நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் திருப்பதி லட்டு சர்ச்சை இன்னும் முடியாத நிலையில் தற்போது மற்றொரு சர்ச்சையாக திருமலையில் உள்ள அன்னதான கூடத்தில் தயிர் சாதத்தில் பூரான் இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் வாரங்கல் சேர்ந்த சந்து எனும் பக்தர் தனது நண்பர்களுடன் மலைப்பாதையில் பாத யாத்திரையாக திருமலைக்கு நடந்து வந்தனர்.
பின்னர் திருமலையில் உள்ள யாத்திரிகள் சமுதாய கூடம் மாதவ நிலையத்தில் மொட்டையடித்து உடமைகளை லாக்கரில் வைத்தனர்.
பின்னர் அங்குள்ள அன்னதான கூடத்தில் சாப்பிட சென்றனர். அங்கு பரிமாறப்பட்ட தயிர் சாதத்தை சாப்பிட்டு கொண்டுருந்தபோது அதில் பூரான் இருப்பதை பார்த்த பக்தர் சந்து அதிர்ச்சி அடைந்தார்.
அதுகுறித்து அங்கிருந்த தேவஸ்தான ஊழியர்களிடம் காண்பித்து இவ்வாறு வந்துள்ளதாக கூறினார்.
ஆனால் பக்தர்களை பேசி அங்கிருந்து வெளியேறும்படியும் கூறியதால் பக்தர்கள் கோபம் அடைந்து அதனை செல்போனில் வீடியோ பதிவு செய்தனர்.
தங்களுக்கு நடந்த சம்பவத்தை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டனர். ஆட்சி மாற்றம் நடந்தாலும் அதிகாரிகள் ஊழியர்கள் அலட்சியமாக செயல்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இன்று காலை புதிய அன்னதானம் கூடத்தை திறந்து வைத்து அதிகாரிகளுடன் முதல்வர் சந்திரபாபு ஆலோசித்து பக்தர்களுகான வசதிகள் மற்றும் பிரசாத தயாரிப்பில் அலட்சியம் இருக்க கூடாது என எச்சரித்த நிலையில் அன்னதானத்தில் பூரான் வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
0
0