அமைச்சர் உதயநிதியின் பேச்சு சரியில்ல… நாக்கை அடக்கி பேசனும்… எச்சரிக்கும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்..!!!

Author: Babu Lakshmanan
22 December 2023, 2:25 pm

அமைச்சர் உதயநிதியின் பேச்சு குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னையை தொடர்ந்து தென் மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்கள் கனமழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன. வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு சார்பில் மத்திய அரசிடம் நிவாரணத் தொகையை கோரியது.

ஆனால், தமிழக அரசு கோரிய நிதியை மத்திய அரசு விடுவிக்கவில்லை. இது தொடர்பாக பேசிய விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அவங்க அப்பன் வீட்டு காசை கேட்டதை போல செயல்படுவதாகவும், எங்கள் வரிப்பணத்தைத் தான் கேட்பதாக கூறியிருந்தார். அவரது இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பாஜகவினரும் தக்க பதிலடி கொடுத்து வந்தனர்.

இந்த நிலையில், அமைச்சர் உதயநிதியின் இந்தப் பேச்சு குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது :- அவங்க பாஷை எப்போதும் அப்படிதான். இப்படியெல்லாம் பேசுறவங்க அவங்க அப்பன் வீட்டு சொத்தை வைத்தா இன்னிக்கு பதவியில் அனுபவிக்கிறாரா?-ன்னு கேட்க முடியுமா? மக்கள் பிரதிநிதிக்கு உரிய மரியாதையை கொடுக்கிறோம்.

அப்பன் வீடு என்ற பேச்சு எல்லாம் அரசியலில் நல்லது இல்லை. அவருடைய தாத்தா எப்படிப்பட்ட அறிஞர். பதவிக்கு ஏற்ற வார்த்தை நாக்கில் அளந்து வரணும். மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது முன் தவணையாக டிச.12-ந்தேதி ரூ.900 கோடி மத்திய அரசு கொடுத்தது. அது எங்க அப்பன் சொத்து, உங்க அப்பன் சொத்துன்னு சொல்ல மாட்டேன். பொறுப்புள்ள பதவியில் இருப்பவர்கள் பொறுப்பை உணர்ந்து பேச வேண்டும், எனக் கூறினார்.

  • Keerthy Suresh new glamorous look கவர்ச்சி உடையில் பிரபல நடிகருடன் குத்தாட்டம்…வைரலாகும் கீர்த்தி சுரேஷ் வீடியோ..!
  • Views: - 430

    1

    0