ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட சாந்தன் இலங்கைக்கு அனுப்ப மத்திய அரசு அனுமதியளித்தது.
தமிழகத்திற்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு வருகை தந்த ராஜீவ் காந்தி கடந்த 1991ஆம் ஆண்டு மே 21ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் வெடிகுண்டு தாக்குதல் மூலம் கொல்லப்பட்டார். அதனை தொடர்ந்து, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ராபர்ட் பையாஸ், ஜெயக்குமார், முருகன், நளினி உட்பட 18 பேர் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
விசாரணைக்கு பின்னர் அவர்ளுக்கு மரணதண்டனை அளிக்கப்பட்டது. தொடர்ந்து, அவர்கள் மரண தண்டனை எதிர்த்து மேல் முறையீடு செய்தனர். அதன் காரணமாக, 1999ஆம் ஆண்டு மே 11ஆம் தேதி அவர்களுக்கு மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
தொடர்ந்து விசாரணை அடுத்து நீதிமன்றம் சாந்தனு, ராபர்ட்பையாஸ், முருகன், நளினி, ரவிச்சந்திரன் உட்பட ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை செய்து உத்தரவிட்டது. அதன் பின்னர், அவர்கள் இலங்கை செல்ல முடியாது என்பதால் விடுதலை செய்யப்பட்டவர்கள் பல சிறப்பு முகாமிற்கு அனுப்பப்பட்டனர். இதேபோல், ராபர்ட்பையாஸ் முருகன், சாந்தன் உட்பட சிலர் திருச்சி மத்திய சிறையில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டனர்.
தொடர்ந்து இலங்கை நாட்டிற்கு செல்வதற்கான முயற்சி ஈடுபட்டு மத்திய அரசிற்கு அதற்கான கோரிக்கைகள் அடங்கிய கடிதம் அனுப்பி இருந்தார். இந்நிலையில், திருச்சி மத்திய சிறையில் உள்ள முகாமில் இருக்கும் சாந்தனை இலங்கைக்கு அனுப்ப மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
சாந்தனுக்கு கடந்த மாதம் உடல் நிலை பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவா் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் உயா் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்ட அவர், தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். கல்லீரல் செயலிழப்பு உள்ளிட்ட பல்வேறு உடல் நல பாதிப்பு ஏற்பட்டிருப்பதால் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் மத்திய அரசு இந்த அனுமதியை அளித்துள்ளது.
மேலும், இது குறித்து திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பாக இலங்கை தூதரக அதிகாரிகளிடம் அனுமதி பெற்ற பின் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்படுவார் என கூறப்படுகிறது.
வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கலவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்…
சச்சின் ரீரிலீஸ்… விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக…
2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல் போட்டியில் மும்பை அணியுடன்…
அபார முயற்சி, ஆனால்? ரஜினிகாந்தை நாம் திரையில் பல கதாபாத்திரங்களில் ரசித்து பார்த்திருப்போம். ஆனால் அனிமேஷனில் ரஜினிகாந்தை கொண்டு வந்த…
வக்பு வாரிய சட்டத்தருத்த மசோதா கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் ஒரு நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும்…
ரொமான்டிக் ஹீரோ டூ ஆக்சன் ஹீரோ சூர்யா தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானதில் இருந்து காதலை மையமாக வைத்து உருவான…
This website uses cookies.