பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளித்த மத்திய அரசு : 7வது முறையாக தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

Author: Udayachandran RadhaKrishnan
23 July 2024, 10:53 am

பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளித்த மத்திய அரசு : 7வது முறையாக தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

நடப்பு 2024- 25-ம் நிதியாண்டுக்கான முழுமையான மத்திய பட்ஜெட் இதுவரை தாக்கல் செய்யவில்லை.

இந்த ஆண்டு மக்களவை தேர்தல் நடந்ததால் இடைக்கால பட்ஜெட் மட்டுமே கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.தற்போது தேர்தல் முடிவடைந்து மத்தியில் 3-வது முறையாக பிரதமர் மோடி தலைமையில் ஆட்சியமைந்துள்ள நிலையில், இந்த நிதியாண்டுக்கான முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்வதில் அரசு மும்முரம் காட்டியது.

இதற்காக பிரதமர் மோடி மற்றும் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ஆகியோர் கடந்த சில வாரங்களாக பொருளாதார நிபுணர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் ஆலோசித்து வந்தனர். இதைத்தொடர்ந்து பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது.

அடுத்த மாதம் (ஆகஸ்டு) 12-ம் தேதி வரை இந்த கூட்டத்தொடர் நடக்கிறது.இதன் முக்கிய நிகழ்வான பட்ஜெட் தாக்கல் இன்று நடக்கிறது. நிதி மந்திரி இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். அவர் தாக்கல் செய்யும் 7-வது பட்ஜெட் இதுவாகும்.

  • Ilaiyaraaja music concert updates அடுத்தடுத்து இசை நிகழ்ச்சி ரெடி…அறிவிப்பை வெளியிட்ட இளையராஜா…ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பு..!