அடுத்த 2 மணி நேரத்துக்கு உஷார் மக்களே…மழை பெய்ய வாய்ப்பிருக்காம்: 7 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் அலர்ட்..!!

Author: Rajesh
11 April 2022, 10:04 am

சென்னை: தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென் மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக-வட இலங்கை கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வருகிற 14ம் தேதி வரை தமிழகத்தில் சில இடங்களில் மழைக்கான வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

இதன் காரணமாக தென் மாவட்டங்கள் உள்பட சில இடங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் மழையால் சில இடங்களில் வெப்பநிலை சற்று குறைந்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை, அரியலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 1173

    0

    0