திருப்பதி கோவிலில் சந்திரபாபு நாயுடு.. முதல்வரான பின் முதல்முறை.. பக்தர்கள் வாழ்த்து மழையில் வழிபாடு!

Author: Udayachandran RadhaKrishnan
13 June 2024, 10:59 am
Chandra
Quick Share

ஆந்திர மாநிலத்தில் நான்காவது முறையாக சந்திரபாபு நாயுடு நேற்று முதல்வராக பதவியேற்றார். இந்நிலையில் நேற்று இரவு தனது மகன் அமைச்சர் லோகேஷ் மற்றும் குடும்பத்தினருடன் தனி விமானத்தில் திருப்பதி வந்தார்.

விமான நிலையத்தில் திருப்பதி, சித்தூர் கலெக்டர்கள் பிரவீன்குமார், ஷன்மோகன், திருப்பதி மாநகராட்சி ஆணையர் அதிதி சிங் மற்றும் எம்எல்ஏக்கள் அதிகாரிகள் வரவேற்றனர்.

இதனை தொடர்ந்து திருமலைக்கு சென்று இரவு தங்கி இன்று காலை ஏழுமலையான் கோயிலில் வைகுண்டம் காம்பளகஸ் வழியாக சென்று வழிபாடு செய்தனர். முன்னதாக கோயில் மகாதுவாரம் முன்பு ( ராஜகோபுர வாயிலில் ) இஸ்தி கப்பால் மரியாதையுடன் அர்ச்சகர்கள் வரவேற்று சுவாமி தரிசனம் செய்து வைத்தனர்.

இதனை தொடர்ந்து ரங்கநாதர் மண்டபத்தில் தீர்த்த பிரசாதங்களை வழங்கி வேத பண்டிதர்கள் மூலம் வேத ஆசிர்வாதம் செய்து வைத்தனர். பின்னர் ஜீயர் மடத்திற்கு சென்றார்.

கோயிலுக்கு வெளியே பக்தர்கள் பொது மக்கள் கூட்டத்தை பார்த்தவுடன் நேரடியாக கூட்டத்திற்கு மத்தியில் சென்று பொது மக்களின் வாழ்த்துகள் கோஷத்திற்கு மத்தியில் ஜீயர் மடத்திற்கு சென்றார். அதனை தொடர்ந்து பேடி அஞ்சனேய சுவாமி கோயிலில் வழிபாடு செய்து அகிலாண்டம் அருகே கற்பூரம் ஏற்றி தேங்காய் உடைத்து வழிப்பட்டனர்.

Views: - 112

0

0