நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு தனி பெரும்பான்மை கிடைக்காததால் சந்திரபாபு நாயுடு ஆதரவு கட்டாயமாகி உள்ளது. அரசியலில் பல ஆண்டுகால அனுபவசாலியான சந்திரபாபு நாயுடு ஆந்திர மாநிலத்திற்கு தேவையானவற்றை கேட்பதில் கில்லாடியாக செயல்பட்டு வருகிறார்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பா.ஜ.க.வுக்கு அவர் சில நிபந்தனைகளை விதித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த வகையில் மத்திய அமைச்சரவையில் மூன்று கேபினட், இரண்டு இணை அமைச்சர் பதவிகளை வழங்க வேண்டும் என்று கேட்டுள்ளார்.
குறிப்பாக சபாநாயகர் பதவியை தெலுங்கு தேசம் கட்சிக்கு தர வேண்டும் என அவர் கேட்டுள்ளார்.கடந்த 2009-ம் ஆண்டு வாஜ்பாய் ஆட்சி காலத்தில் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த பால யோகி மக்களவை சபாநாயகராக இருந்தார்.
அதேபோல இந்த முறையும் சபாநாயகர் பதவி தர வேண்டும் என சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார். இதேபோல நிதித்துறை, வேளாண்மைத்துறை, நீர்வளத்துறை, தகவல் தொழில்நுட்பத்துறை, ஊரக மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை, சுகாதரம், கல்வித்துறை உள்ளிட்ட மந்திரி பதவிகளை தெலுங்கு தேசம் கட்சி கேட்டு சந்திரபாபு நாயுடு வலியுறுத்தி உள்ளர் என்று தகவல் வெளியாகி உள்ளது.
விரும்பும் இாக்காகள் அடங்கிய பட்டியலை தெலுங்கு தேசம் சார்பில் பா.ஜ.க. தலைவர் ஜே.பி. நட்டாவுக்கு அனுப்பப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகத்துக்கு அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி, தேர்தல் வியூகம் என அடுத்தடுத்து…
இசைப்புயலுக்கு வந்த சோதனை ஏ.ஆர்.ரஹ்மான் என்னும் இசைப்புயல் 32 வருடங்களுக்கு மேல் வீரியம் குறையாமல் வீசிக்கொண்டே இருக்கிறது. இக்கால தலைமுறைக்கும்…
மதுரை மாநகர் கீரைத்துறை காவல்துறையினருக்கு வில்லாபுரம் கிழக்கு தெரு முனியான்டி கோவில் அருகில் உள்ள கருவேலங்காட்டுக்குள் கஞ்சா கடத்தப்படுவதாக கடந்த…
களைகட்டும் கேங்கர்ஸ் சுந்தர் சியும் வடிவேலுவும் இணைந்து கலக்கிய “கேங்கர்ஸ்” திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. கிட்டத்தட்ட…
நடிகர் பாக்யராஜ் முன்னணி இயக்குநர், நடிகராக 80 மற்றும் 90களில் திகழ்ந்தார். இவர் உடன் நடித்த நடிகை பூர்ணிமா ஜெயராமை…
பொள்ளாச்சி அடுத்த ஆழியார் அணைப்பகுதிக்கு சென்னை பூந்தமல்லி சவிதா பிசியோதெரபி கல்லூரியிலிருந்து நான்காம் ஆண்டு படித்து வரும் 25க்கும் மேற்பட்ட…
This website uses cookies.