முதலமைச்சரின் டெல்லி பயணத்தில் மாற்றம்.. நாளை பிரதமரை சந்திக்க நேரம் ஒதுக்கக் கோரி கடிதம்!!!

Author: Udayachandran RadhaKrishnan
18 December 2023, 4:19 pm

முதலமைச்சரின் டெல்லி பயணத்தில் மாற்றம்.. நாளை பிரதமரை சந்திக்க நேரம் ஒதுக்கக் கோரி கடிதம்!!!

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்த இண்டியா கூட்டணியின் ஆலோசனைக் வட்டம் நாளை டெல்லியில் நடைபெற உள்ளது. இதற்காக இன்று இரவே முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லி செல்ல உள்ளார்.

இந்த நிலையில் தென்மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களில் கனமழை, வெள்ள பாதிப்பு நீடித்து வரும் நிலையில், முதல்வரின் டெல்லி பயணத்தில் மாற்றம் செய்யப்படும் என தகவல் வெளியாகியிருந்தது.

அதாவது டெல்லியில் நாளை பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் அண்மையில் பெய்த மிக்ஜாம் புயல் மற்றும் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு விரைந்து நிதி ஒதுக்க கோரவும்,
தற்போது தென் மாவட்டங்களில் பெய்து வரும் அதி கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து எடுத்துக் கூறி ஆலோசிக்கவும், நாளை டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை சந்திக்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நேரம் கோரி கடிதம் எழுதியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!