திடீர் மாற்றம் செய்யப்பட்ட முதல்வரின் அமெரிக்கா பயண பிளான்: யாரையெல்லாம் சந்திக்கத் திட்டம்..?!!
Author: Sudha5 August 2024, 1:51 pm
தொழில் வாய்ப்புகளை ஈர்ப்பதற்காக வருகிற 22 ஆம் தேதி செல்ல இருந்த முதலமைச்சர் மு க ஸ்டாலினின் அமெரிக்க பயணம் வருகிற 27 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
15 நாட்கள் அமெரிக்கா சென்று வரும் வகையில் பயணத்திட்டம் வகுக்கப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அமெரிக்காவில் கூகுள் நிறுவனத் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவன உயர் அதிகாரிகளையும் முதல்வர் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் 3 அல்லது 4 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொள்ளும் வகையில் பேச்சு வாத்தை நடத்தவும் திட்டமிடப் பட்டுள்ளதாக தெரிகிறது.
அமெரிக்காவில் உள்ள தொழிலதிபர்களை சந்தித்து தமிழகத்தில் தொழில் தொடங்க முதலமைச்சர் அழைப்பு விடுக்க இருப்பதாகவும்,மற்றும் அமெரிக்க வாழ் தமிழர்களையும் சந்தித்து அவர்களையும் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க அழைப்பு விடுக்க இருப்பதாக அதிகார பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.