சிம் கார்டை உடைத்து போட்டு இளைஞர் தற்கொலை… விடுதியில் சடலமாக மீட்பு ; போலீசார் விசாரணையில் வெளியான பகீர் தகவல்!!

Author: Babu Lakshmanan
18 April 2023, 12:00 pm

செங்கல்பட்டு ; செங்கல்பட்டு அருகே விடுதியில் தங்கியிருந்த இளம் என்ஜினியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தை கிருஷ்ணன் என்பவர் மத்திய பாதுகாப்பு படையில் காவலராக பணியாற்றி வருகிறார். இவருடைய மூத்த மகன் வசந்த், மெக்கானிக்கல் என்ஜினியரிங் படித்து விட்டு, செங்கல்பட்டு மாவட்டம் பள்ளியகரம் அருகே தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

அங்கு தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கி தினமும் வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் அவர் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்தார்.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பந்தப்பட்ட விடுதிக்கு சென்று, அவரது உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் அவர் தனது சிம்கார்டை உடைத்து இருப்பது தெரியவந்தது. மேலும், ஆன்லைன் செயலி மூலம் கடன் வாங்கியிருந்ததும், அதனை செலுத்த முடியாமல் அவர் தவித்து வந்த நிலையில், உறவினர்களிமுடம் அடிக்கடி பணம் பெற்று வந்தது தெரிய வந்துள்ளது.

எனவே, ஆன்லைன் செயலியில் கடன் பெற்று திரும்ப செலுத்த முடியாததால் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 493

    0

    0