சென்னையில் ரூ.100 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் : தமிழகத்தையே உலுக்கும் அதிர்ச்சி சம்பவம்..!!
Author: Babu Lakshmanan13 August 2022, 9:09 am
சென்னை விமான நிலையத்திற்கு கடத்தி வரப்பட்ட ரூ.100 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் போதைப்பொருட்களின் புழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவை பிறப்பித்துள்ளார். ஆனால், போதைப் பொருட்களின் புழக்கத்தை கட்டுப்படுத்திய பாடில்லை.
இதனிடையே, சென்னை விமான நிலையத்தில் போதைப் பொருள் கடத்துவதாக சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி, எத்தியோப்பியாவில் இருந்து சென்னைக்கு வந்த இக்பால் பாஷா என்ற பயணியிடம் அதிகாரிகள் சோதனையிட்டனர்.
அப்போது, அவரிடம் இருந்து 100 கோடி ரூபாய் மதிப்பிலான 9 கிலோ 590 கிராம் எடையுள்ள கொக்கைன் போதைப் பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதையடுத்து இக்பால் பாஷா கைது செய்யப்பட்டு, விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் போதைப் பொருள்களின் புழக்கம் அதிகரித்து வரும் நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்ட மறுநாளே ரூ.100 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் சென்னைக்கு கடத்தப்பட்டுள்ள சம்பவம் போலீசாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.